Published:Updated:

`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்துக் கொலை!

சிந்து ஆர்
`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்துக் கொலை!
`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்துக் கொலை!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், ஓமனில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் மும்பையைச் சேர்ந்த இரண்டு பேரிடம் ஓமன் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்துக் கொலை!

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் குறக்குடி பகுதியைச் சேர்ந்த ரெங்கபாயின் ஒரே மகன், பாபு. சிறு வயதிலேயே தந்தையை இழந்த பாபு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓமன் நாட்டில் சலாலா பகுதியில் ஏசி மெக்கானிக்காக வேலைபார்த்துவந்தார். ஐந்து ஆண்டுகளாக ஊருக்கு வராத நிலையில், ஒரு வாரத்திற்குள் விடுமுறைக்கு ஊருக்கு வர இருப்பதாக தாய்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று, பாபுவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற அருள் என்பவர், பாபுவின் தாய்க்கு போன் செய்து, பாபுவை யாரோ கொலைசெய்து அங்குள்ள பாழடைந்த வீட்டில் கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருப்பதாகவும், அவரது சடலத்தை போலீஸார் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்துக் கொலை!

 இது சம்பந்தமாக, சந்தேகத்தின் பேரில் மும்பையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களிடம் விசாரணை நடத்திவருவதாகவும் தெரிவித்துள்ளார். பாபு, கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலைபார்த்த பணத்தை வீட்டிற்கு அனுப்பாமல் இருந்துள்ளார். வேலை செய்த பணத்தை அங்குள்ள ஒரு நண்பருக்குக் கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தை வாங்குவது சம்பந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். உடனே, உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரவும் குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Vikatan