Published:Updated:

சரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு!

எம்.கணேஷ்
சரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு!
சரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது சரத்துப்பட்டி கிராமம். இங்கு கடந்த 14-ம் தேதி இரவு, போலீஸாருக்கும் கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட காவலர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பாஸ்கரனின் கண்ணுக்குக் கீழே காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்திற்குப் பிறகு, போலீஸார் சரத்துப்பட்டியில் குவிக்கப்பட்டனர். போலீஸார் தங்களது அதிகாரத்திற்கு மீறி செயல்பட்டு, சரத்துப்பட்டியைச் சேர்ந்த பட்டியலின மக்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும், போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எவிடன்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு!

முன்னதாக எவிடன்ஸ் கதிர், சரத்துப்பட்டி மக்களையும் போலீஸாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்துப் பேசினார். எவிடன்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு போலீஸாருக்கும் சரத்துப்பட்டியைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடுமையான காயத்துடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்பி மீது கற்கள் வீசப்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், அவரை கட்டை, கம்பியால் தாக்கியதாகப் பொய்யான புகார் எழுதி வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். அதனை தாசில்தாரும் இன்ஸ்பெக்டர் சுரேஷும் தான் செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு!

சம்பவத்தன்று மறியலில் ஈடுபட்ட 70-80 பேரை விட்டுவிட்டு, சரத்துப்பட்டி கிராமத்திற்குள் வந்த போலீஸார், பொதுமக்களை கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில் 72 வயதான முத்தையா, காளியம்மாள், முத்துநாகன், ஜெயக்கண்ணன் ஆகியோரை போலீஸார் உருட்டுக்கட்டையால் தாக்கியதால், அவர்கள் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேவையில்லாமல், ஊர் மக்களை போலீஸார் தொடர்ந்து அச்சுறுத்திவருவதால், சுமார் 3ஆயிரத்து 500 பேர் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மக்களை கடுமையாக அடித்துத் துன்புறுத்திய போலீஸாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரத்துப்பட்டி கலவரம் தொடர்பாக மேலும் தெரிந்துகொள்ள இந்தச் செய்தியைப் படிக்கவும் : ”தேனி எஸ்பி-யை கற்கள் வீசி தாக்கிய மர்மக் கும்பல் - சமாதானம் பேசச் சென்றபோது நடந்த விபரீதம்!”

Vikatan