Published:Updated:

`பட்டாக்கத்தியால் ‘கேக்’ வெட்டிய ரவுடி!’ - வீச்சரிவாளுடன் போஸ் கொடுத்த கூலிப்படை

லோகேஸ்வரன்.கோ
`பட்டாக்கத்தியால் ‘கேக்’ வெட்டிய ரவுடி!’ - வீச்சரிவாளுடன் போஸ் கொடுத்த கூலிப்படை
`பட்டாக்கத்தியால் ‘கேக்’ வெட்டிய ரவுடி!’ - வீச்சரிவாளுடன் போஸ் கொடுத்த கூலிப்படை

அரக்கோணம் அருகே ரவுடி ஒருவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். இந்த நிகழ்வில், வீச்சரிவாளுடன் ‘போஸ்’ கொடுத்த கூலிப்படையைச் சேர்ந்த 5 ரவுடிகளை போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

`பட்டாக்கத்தியால் ‘கேக்’ வெட்டிய ரவுடி!’ - வீச்சரிவாளுடன் போஸ் கொடுத்த கூலிப்படை

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த நம்மானேரியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (42). பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய இவர் ரவுடியாக வலம்வந்தார். கடந்த 10-ம் தேதி செந்தில்குமார் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். இதில், சென்னையைச் சேர்ந்த கூலிப்படை ரவுடிகள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். செந்தில்குமாரை ரவுடிகள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினர். பட்டாக்கத்தி மற்றும் வீச்சரிவாள்களைக் கையில் வைத்துக்கொண்டு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். கத்தியுடன் போட்டோவுக்கு `போஸ்’ கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, சென்னை ரவுடிகள் நம்மானேரியில் தங்கவைக்கப்பட்டனர். இதுபற்றி அரக்கோணம் டி.எஸ்.பி விஜயகுமாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் நம்மானேரியில் ரவுடிகள் தங்கியிருந்த இடத்தை அதிரடியாகச் சுற்றிவளைத்தனர். 

`பட்டாக்கத்தியால் ‘கேக்’ வெட்டிய ரவுடி!’ - வீச்சரிவாளுடன் போஸ் கொடுத்த கூலிப்படை

இதையறிந்த ரவுடிகள் அங்கிருந்து தப்பிக்க முயற்சிசெய்தனர். பிறந்தநாள் கொண்டாடிய செந்தில்குமார், திருநின்றவூரைச் சேர்ந்த ஜோசப் தேவக்குமார், உதயநிதி, ஹார்ட்டீஸ், கிளமன்ட் பிரபாகரன் ஆகிய 5 ரவுடிகள் மட்டுமே பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பிவிட்டனர். பிடிபட்டவர்களில் ஜோசப் தேவக்குமார் என்பவர் திருநின்றவூரில் 2015-ம் ஆண்டு ஒரு பாலியல் வழக்கில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டவர் என்பது தெரியவந்திருக்கிறது. அப்போதும், இதே டி.எஸ்.பி விஜயகுமார் தான் ஜோசப் தேவக்குமாரை கைதுசெய்திருக்கிறார். அதை நினைவில் வைத்து டி.எஸ்.பி-யிடம் `என்னைத் தெரிகிறதா சார்? என்றுகூறி ஜோசப் தேவக்குமார் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 5 ரவுடிகளையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Vikatan