Published:Updated:

துப்பட்டாவை இழுத்த இன்ஸ்பெக்டர்! - காவலர்கள் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை

எஸ்.மகேஷ்
துப்பட்டாவை இழுத்த இன்ஸ்பெக்டர்! - காவலர்கள் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை
துப்பட்டாவை இழுத்த இன்ஸ்பெக்டர்! - காவலர்கள் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை

சென்னையை அடுத்த அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ்நகருக்குச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், `அங்கு குடியிருக்கும் இளம்பெண்ணை துப்பட்டாவை பிடித்து இழுத்தார்' என்று போலீஸ் உயரதிகாரிகளிடம் இன்று புகார் கொடுக்கப்பட்டது. 

துப்பட்டாவை இழுத்த இன்ஸ்பெக்டர்! - காவலர்கள் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை

சென்னையை அடுத்த அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ்நகர், ஓம்சக்தி தெருவைச் சேர்ந்தவர்கள் மேற்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கண்ணீர்மல்க புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். 

 இதுகுறித்து மாலினி என்பவர் கூறுகையில், ``நாங்கள் முத்தமிழ்நகர் ஓம் சக்தி தெருவில் 35 ஆண்டுகளுக்கு மேலாகக் குடியிருந்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன் நாங்கள் குடியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்தனர். இதனால் நீதிமன்றத்துக்குச் சென்று எங்களுக்கு சாதகமான ஆர்டரைப் பெற்றோம். தற்போது வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் தகர சீட்களால் தற்காலிகமாக வீடுகளைக் கட்டி குடியிருந்துவருகிறோம். 

இந்தநிலையில் இன்று காலை அம்பத்தூர் இன்ஸ்பெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் நீதிமன்ற ஆர்டரை கொடுத்தோம். அப்போது இன்ஸ்பெக்டர் அந்த ஆர்டர் செல்லாது என்றுகூறி தற்காலிக வீடுகளை இடித்துத் தள்ளினர். அதை நாங்கள் தட்டிக்கேட்டபோது என்னை இன்ஸ்பெக்டர் அசிங்கப்படுத்தினார். 10 ஆண் காவலர்கள் முன்னிலையில் என்னுடைய துப்பட்டாவைப் பிடித்து இழுத்தார். இதனால் அவமானத்தில் கூனிக்குறுகினேன். அதைத் தட்டிக்கேட்ட என் அப்பாவையும் தள்ளி விட்டனர் போலீஸார். 

துப்பட்டாவை இழுத்த இன்ஸ்பெக்டர்! - காவலர்கள் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை

என்னுடைய செல்போனை வாங்கி வைத்துக்கொண்ட போலீஸார், காவல் நிலையத்துக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு சொல்கின்றனர். மேலும், என்னைப்பார்த்து இன்ஸ்பெக்டர், நீ ஒரு வயசு பொண்ணு. உன் மீது என்ன கேஸ் போட முடியுமோ அதைப் போடுவேன் என்று கூறி மிரட்டினார். போலீஸார் என்னைத் தாக்கியதால் எனக்கு காயம் ஏற்பட்டது. இதனால்தான் இணை கமிஷனரிடம் புகார் கொடுக்க வந்தேன். ஆனால் இங்குள்ளவர்கள் கலெக்டரைச் சந்திக்கும்படி பதிலளிக்கின்றனர். நான் அடிப்பட்ட காயம் குறித்து புகார் கொடுக்க வந்தேன். ஆனால், வருவாய்த்துறையிடம் புகார் கொடுக்கச் சொல்கிறார்கள்" என்றார் கண்ணீருடன். 

முத்தமிழ்நகரைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``பல ஆண்டுகளாகக் குடியிருந்த வீடுகளைத்தான் இழந்தோம். தற்போது போலீஸாரின் அராஜக செயல்களால் மானத்தையும் இழந்துவருகிறோம்" என்றனர். 

இதுகுறித்து அம்பத்தூர் போலீஸாரிடம் விசாரித்தபோது, `அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற எங்களிடம் அதிகாரிகள் பாதுகாப்பு கேட்டிருந்தனர். அதன்படி அங்கு நாங்கள் சென்றோம். வீடுகளை இடித்தபோது அதை தடுத்தவர்களை அப்புறப்படுத்தினோம். ஆனால், தேவையில்லாமல் இன்ஸ்பெக்டர் மீது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பொய் புகார் கொடுக்க வந்துள்ளனர்'' என்றனர். 

துப்பட்டாவை இழுத்த இன்ஸ்பெக்டர்! - காவலர்கள் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``ஆக்கிரமிப்புகளை மூன்று மாதங்களுக்கு முன் அகற்றினோம். தற்போது சிலர் அதே இடத்தில் வீடுகளைக் கட்டியுள்ளனர். அதனால்தான் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினோம். அதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறினர். இதனால் அங்கிருந்து திரும்ப வந்துவிட்டோம்" என்றனர். 
 
தேர்தலுக்கு முன் கள்ளிக்குப்பம் முத்தமிழ்நகர் ஓம் சக்தி தெருவில் உள்ள வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அருகில் உள்ள பகுதியில் வாடகைக்கு வீடுகளில் தங்கியுள்ளனர். இந்தச் சமயத்தில்தான் நீதிமன்றத்துக்குச் சென்ற சிலர், தடை உத்தரவை பெற்றுள்ளனர். இதனால் தங்களின் இடம் பறிபோய்விடக் கூடாது என்று தகரத்தில் தற்காலிக குடியிருப்பை அமைத்துள்ளனர். இன்னும் சிலர் அங்குள்ள மரத்தடி நிழலில் குடியிருந்துவருகின்றனர். ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறையினர் சட்டப்படி இந்தப் பிரச்னையை கையாள முடிவு செய்துள்ளனர். 

 இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் பொற்கொடியைத் தொடர்புகொண்டபோது அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம். 

 இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் பரபரப்பான குற்றசாட்டுக்களை சுமத்திய சம்பவம் காவல்துறையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
 

Vikatan