Published:Updated:

`மனைவி எஸ்கேப்; போலீஸ் டார்ச்சர்!' - கழுத்தை அறுத்துக்கொண்ட கூலித்தொழிலாளி

எஸ்.மகேஷ்
`மனைவி எஸ்கேப்; போலீஸ் டார்ச்சர்!' - கழுத்தை அறுத்துக்கொண்ட கூலித்தொழிலாளி
`மனைவி எஸ்கேப்; போலீஸ் டார்ச்சர்!' - கழுத்தை அறுத்துக்கொண்ட கூலித்தொழிலாளி

காவல் நிலையத்துக்கு வந்த கார்த்திக் என்பவர், கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். அவரிடம் விசாரித்தபோது மனைவி மற்றும் போலீஸாரின் டார்ச்சர் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். 

`மனைவி எஸ்கேப்; போலீஸ் டார்ச்சர்!' - கழுத்தை அறுத்துக்கொண்ட கூலித்தொழிலாளி

சென்னை நெசப்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், கூலித்தொழிலாளி. இவரின் மனைவி சுமித்ரா. கார்த்திக் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அசோக்நகர் காவல் நிலையத்துக்கு நேற்றிரவு கார்த்திக் வந்தார். திடீரென பிளேடால் கழுத்தை அறுத்தார். அதைப்பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கார்த்திக்கை மடக்கிப்பிடித்த போலீஸார் அவரின் தற்கொலை முயற்சியை தடுத்தனர். அதற்குள் கார்த்திக்கின் கழுத்திலிருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவரை மீட்ட போலீஸார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து கார்த்திக்கிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் கூறிய தகவலைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கார்த்திக் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரணை நடந்துவந்தது. இதனால் அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. தற்போது கார்த்திக்கை பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார் சுமித்ரா. இதனால் விரக்தியடைந்த கார்த்திக், அளவுக்கு அதிகமாக மதுகுடித்துள்ளார். போதை தலைக்கேறியதும் மனைவி பிரிந்து சென்றததற்கு போலீஸார்தான் காரணம் என்று கருதிய கார்த்திக் காவல் நிலையத்துக்கு வந்தார். அவரை அங்குள்ள போலீஸார் சமரசப்படுத்தி வெளியில் அனுப்பினர். வெளியில் சென்ற அவர், கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அதை தடுத்துள்ளோம். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். 

இதற்கிடையில் கார்த்திக் தற்கொலை முயன்ற சம்பவத்துக்கு இன்னொரு காரணம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் மீது வழக்குகள் உள்ளதால் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்திக்கை அவரின் மனைவி அடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தத் தகவல் உறுதிசெய்யப்படவில்லை. இதனால் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாகத்தான் கார்த்திக் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

காவல் நிலையத்திலேயே கார்த்திக் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து பணியில் உள்ள காவலர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அசோக்நகர் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.