Published:Updated:

`யூடியூப் வீடியோ பார்த்தனர்; இரிடியம் வியாபாரிகளாக மாறினர்!' - குமரியை அதிரவைத்த கொள்ளையர்கள்

சிந்து ஆர்
`யூடியூப் வீடியோ பார்த்தனர்; இரிடியம் வியாபாரிகளாக மாறினர்!' - குமரியை அதிரவைத்த கொள்ளையர்கள்
`யூடியூப் வீடியோ பார்த்தனர்; இரிடியம் வியாபாரிகளாக மாறினர்!' - குமரியை அதிரவைத்த கொள்ளையர்கள்

வழிப்பறிக்கொள்ளையர்கள் தங்கள் தொழிலில் பல சிரமங்கள் இருப்பதால் யூடியூப் இணையதளத்தைப் பார்த்து கிடைத்த ஐடியாவால் இரிடியம் பிசினஸ் செய்வதாக மோசடி செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

`யூடியூப் வீடியோ பார்த்தனர்; இரிடியம் வியாபாரிகளாக மாறினர்!' - குமரியை அதிரவைத்த கொள்ளையர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் கடந்த 15-ம் தேதி வீட்டருகில் உள்ள டீக்கடையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜன் என்பவர், `இரிடியம் வாங்கி வீட்டில் வைத்தால் அதிக செல்வம் பெருகும் என்றும். இவற்றை வெளிநாடுகளுக்கு விற்றால் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்' எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய அரவிந்த், நாகராஜனிடம் இரிடியம் குறித்த விவரங்களைக் கேட்டுள்ளார். இரிடியம் வைத்திருக்கும் ஒருவர் இருக்கிறார் எனக்கூறி சுசீந்திரம் சீயோன்புரத்தைச் சேர்ந்த ஜான் ஆல்வின் பிரபுவிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஜான் ஆல்வின் பிரபு, முதற்கட்டமாக இருபத்தைந்து ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தொகை தரவேண்டும் எனவும், இரிடியம் கையில் கிடைத்ததும், மீதமுள்ள இருபத்தைந்தாயிரம் ரூபாய் தர வேண்டும் எனவும் கூறினார்.

அதற்கு அரவிந்த் சம்மதம் தெரிவித்து முன்பணமாக இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுத்தார். இரண்டு நாள்கள் கழித்து, அரவிந்துக்கு போன் செய்து அஞ்சுகிராமம் பால்குளம் பகுதிக்கு வருமாறு அழைத்தார்கள். அங்குசென்று பார்த்தபோது ஜான் ஆல்வின் பிரபு மற்றும் கோட்டார் கோவிலடிவிளை தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார், தேனி மாவட்டம் குமுளி வண்டி பெரியார் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அரவிந்திடம் மீதமுள்ள இருபத்தைந்தாயிரம் ரூபாயை வாங்கியுள்ளனர். ஆனால், இரிடியம் கொடுக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரவிந்த், இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸில் புகார் அளித்தார்.

`யூடியூப் வீடியோ பார்த்தனர்; இரிடியம் வியாபாரிகளாக மாறினர்!' - குமரியை அதிரவைத்த கொள்ளையர்கள்

வழக்கு பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்து ஜான் ஆல்வின் பிரபு, நாகராஜன், சதீஷ்குமார் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இந்த மூன்றுபேரும் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள். வழிப்பறிக்கொள்ளை கஷ்டமாக இருப்பதால், சதுரங்க வேட்டை சினிமா பாணியில் சம்பாதிக்க முடிவுசெய்தனர். அதற்காக யூடியூப் இணையதளத்தைப் பார்த்து போலி இரிடியம் தயாரிப்பதை கற்றுக்கொண்டனர். பித்தளைக் குடம் மற்றும் அதை ஈர்ப்புத் தன்மை உடையதாக மாற்றுவதற்கு காந்தம் மற்றும் காப்பர் பயன்படுத்தியுள்ளனர். அதை பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் முழுமையாகப் பொதிந்து அதற்கு மேல் அட்டை பேப்பர்கள் கொண்ட சுமார் ஏழு அடுக்கிற்கு சுற்றி அதன் மேல் நெல் கொட்டி அதை ஒரு மரப்பெட்டியில் வைத்திருப்பார்கள். அதற்கு மேலாகத் திட்டத்தைக் கொண்டு செல்லும்போது ஏற்கெனவே பித்தளைக் குடத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தம் போன்ற உலோகங்களால் அரிசி அதிர்வுகள் ஏற்பட்டு ஒட்டிக்கொள்ளும். தமிழகம், கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து பல பேரிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார்கள்.

`யூடியூப் வீடியோ பார்த்தனர்; இரிடியம் வியாபாரிகளாக மாறினர்!' - குமரியை அதிரவைத்த கொள்ளையர்கள்

இவர்களிடமிருந்து 57 பவுன் நகை மற்றும் 14.25 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றனர்.