Published:Updated:

கேரள பெண் போலீஸ் செளமியா கொலை வழக்கு - தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மரணம்

சிந்து ஆர்
கேரள பெண் போலீஸ்  செளமியா கொலை வழக்கு - தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மரணம்
கேரள பெண் போலீஸ் செளமியா கொலை வழக்கு - தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மரணம்

கேரள பெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொலை செய்துவிட்டு தன் உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீவைத்த ஆண் போலீஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கேரள பெண் போலீஸ்  செளமியா கொலை வழக்கு - தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மரணம்

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் போலீஸ் ஆபீஸராகப் பணிபுரிந்தவர் சௌமியா. ஆலுவா டிராஃபிக் காவலராக இருந்தவர் அஜாஸ். இவர்கள் இருவரும் திருச்சூர் காவலர் பயிற்சியின்போதே நட்பாக பழகியுள்ளனர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான செளமியாவை திருமணம் செய்யும் ஆசையில் வேறு திருமணமே செய்யாமல் இருந்துள்ளார் அஜாஸ். செளமியாவுக்கு அஜாஸ் ஒன்றேகால் லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை செளமியா திருப்பிக் கொடுத்தபோது வாங்காமல் தன்னைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளார் அஜாஸ். இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி (கடந்த சனிக்கிழமை) பைக்கில் சென்ற செளமியாவை காரால் இடித்த அஜாஸ், பின்னர் அரிவாளால் வெட்டியதுடன், பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தார்.

கேரள பெண் போலீஸ்  செளமியா கொலை வழக்கு - தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மரணம்

செளமியாவை எரித்த அஜாஸ் தன் உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். 50 சதவிகிதம் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததால் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார் அஜாஸ். அவரிடம் ஆலப்புழா மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளாததால் செளமியாவைக் கொலை செய்ததாக அஜாஸ் கூறியுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அஜாஸ் மரணமடைந்தார்.