Published:Updated:

லஞ்ச ஒழிப்புப் புகாரில் அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்! - திருச்சியில் அதிர்ச்சி

சி.ய.ஆனந்தகுமார்
லஞ்ச ஒழிப்புப் புகாரில் அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்! - திருச்சியில் அதிர்ச்சி
லஞ்ச ஒழிப்புப் புகாரில் அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்! - திருச்சியில் அதிர்ச்சி
புதிய கடைகளுக்கு மின்னிணைப்பு வழங்குவதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஒழிப்புப் புகாரில் அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்! - திருச்சியில் அதிர்ச்சி
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் கண்மணி. இவர் திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் புதிதாக 2 கடைகளைக் கட்டியுள்ளார். அந்தக் கடைகளுக்கு மின்னிணைப்பு வழங்குவதற்காக ஸ்ரீரங்கம் சீனிவாச்சாரியார் சாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
அதையடுத்து மின்னிணைப்பு பெறுவதற்காக அதிகாரிகளைச் சந்தித்து கண்மணி கேட்டபோது, அந்த அலுவலகத்தில் பணி செய்த திருவானைக்காவல் பிரிவு உதவி மின் பொறியாளர் தியாகராஜன், மின் இணைப்பு கொடுக்க பத்தாயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரிகளுக்கு மின்  இணைப்புக்காக லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கண்மணி இதுகுறித்து திருச்சி மன்னார்புரம் சாலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புப் புகாரில் அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்! - திருச்சியில் அதிர்ச்சி
அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புகாரை பதிவு செய்து, அவர்களின் ஆலோசனையின் பேரில் கண்மணி இடம் ரசாயனப் பொடி தூவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, மின்வாரிய உதவி பொறியாளரிடம் கொடுக்கவும், உதவிய மின்பொறியாளரை கையும் களவுமாகப் பிடிக்கவும் திட்டமிட்டார்கள்.
அதன்படி நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர் ராணி ஆகியோர் தலைமையிலான போலீஸார் மறைந்திருக்க, அங்கு வந்த கண்மணியே உதவி பொறியாளர் தியாகராஜனிடம் ரசாயனப் பொடி தடவிய பணத்தைக் கொடுத்தார். சமயம் பார்த்து காத்திருந்த போலீஸார் தியாகராஜனை லாகவமாகப் பிடித்தனர்.
அதையடுத்து நள்ளிரவு வரை போலீஸார் விசாரணை நடத்தி உதவி பொறியாளர் தியாகராஜனைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மின் இணைப்புக்காக தற்போது லஞ்சம் கேட்ட மின்சார வாரியத்தின் உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் மட்டுமல்லாமல், சமீப காலமாக திருச்சி மாவட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் அடுத்தடுத்து லஞ்ச விவகாரத்தில் கைது செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துகிறது.