Published:Updated:

`பெண் பாவம் உன்னைச் சும்மா விடாது!'- கல்யாண மன்னனான இன்ஜினீயர் அஜித்தை சிக்க வைத்த லவ் ஸ்டோரி 

எஸ்.மகேஷ்
`பெண் பாவம் உன்னைச் சும்மா விடாது!'- கல்யாண மன்னனான இன்ஜினீயர் அஜித்தை சிக்க வைத்த லவ் ஸ்டோரி 
`பெண் பாவம் உன்னைச் சும்மா விடாது!'- கல்யாண மன்னனான இன்ஜினீயர் அஜித்தை சிக்க வைத்த லவ் ஸ்டோரி 

சென்னை வளசரவாக்கத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னனான இன்ஜினீயர் அஜித் போலீஸாரிடம் சிக்கினார். கேரளாவிலிருந்து மூன்றாவது மனைவிக்கு வந்த போன் அழைப்பே அஜித்துக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

`பெண் பாவம் உன்னைச் சும்மா விடாது!'- கல்யாண மன்னனான இன்ஜினீயர் அஜித்தை சிக்க வைத்த லவ் ஸ்டோரி 


சென்னை வளசரவாக்கத்தில் தேவிகா என்பவர், தன்னுடைய கணவர் அஜித் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தார். அவர் கொடுத்த புகார் மனுவில், ``எனது கணவர் அஜித்துடன் எனக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 6 வயதில் ஒரு மகன் உள்ளான். கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் என் கணவர் என்னைப் பிரிந்து சென்றுவிட்டார். அடிக்கடி வீட்டுக்கு வரும் அஜித்  மகனைப் பார்த்து விட்டுச் செல்வார். 

கடந்த வாரம் என்னிடம் கேரளாவிலிருந்து ஜோதி என்பவர் போனில் பேசினார். அவர் அஜித் குறித்து சில தகவல்களைத் தெரிவித்தார். அஜித், கடந்த 1998-ம் ஆண்டு ஜோதியைத் திருமணம் செய்ததாகவும், 18 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் இருப்பதாகவும் ஜோதி என்னிடம் தெரிவித்தார். பின்னர் 2002-ம் ஆண்டு டெலிலா என்ற பெண்ணை அஜித் திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு அஜித் மூலம் 12 வயதில் ஒரு மகன் உள்ளார் என்று ஜோதி என்னிடம் கூறினார். இது குறித்து நான் எனது கணவரிடம் கேட்டபோது, வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். கடைசியாக தற்போது என் கணவருக்கு இன்னொரு பெண்ணிடம் நட்பு ஏற்பட்டுள்ளது. அவரையும் ஏமாற்றி 4 வதாக மோசடி திருமணம் செய்து கொண்டதாக தகவல் உள்ளது. எனவே, அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார் தேவிகா

அதன்பேரில் வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமை வீரன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பிறகு அஜித் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய சொந்த ஊர் கேரளா, கொல்லம். நான் இன்ஜினீயரிங் எலக்ட்ரானிக்ஸ் படித்துள்ளேன். எனக்கு கேரளாவில் இரண்டு திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளன. அதன்பிறகு சென்னை சாலிகிராமத்துக்குக் குடிபெயர்ந்தேன். அப்போது சென்னையைச் சேர்ந்த தேவிகாவை திருமணம் செய்தேன். தேவிகா மூலம் எனக்கு ஒரு மகன் உள்ளார். தேவிகாவுக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவரைப்பிரிந்து அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். 

தேவிகாவிடம் பேசியபோது அவர் எந்தத் தகவலையும் சொல்ல மறுத்துவிட்டார். 

`பெண் பாவம் உன்னைச் சும்மா விடாது!'- கல்யாண மன்னனான இன்ஜினீயர் அஜித்தை சிக்க வைத்த லவ் ஸ்டோரி 

போலீஸார் கூறுகையில், ``அஜித்துக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளதாக தேவிகா எங்களிடம் கூறினார். அதுதொடர்பாக அஜித்திடம் விசாரித்தபோது அவர் முழுமையான தகவல்களைத் தெரிவிக்கவில்லை. இருப்பினும் தேவிகா கொடுத்த புகாரின் பேரில் அஜித் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அஜித் குறித்து ஜோதி, டெலிலா ஆகியோர் புகார் கொடுத்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``அஜித், பார்ப்பதற்கு ஹீரோ போல இருக்கிறார். மேலும் அவர் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்திவருகிறார். இந்தச் சமயத்தில்தான் அஜித்துக்கு இன்னொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டதாக தேவிகா குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால், அந்தப் பெண் யாரென்று தெரியவில்லை. அஜித்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தியபோது, அவர் எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார் என்று தெரியவந்தது. அவரின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சில பெண்களுடன் அஜித்துக்கு நல்ல நட்பு இருந்துவருகிறது. அதில் ஒருவரை அஜித் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக தேவிகா விசாரணையின்போது எங்களிடம் தெரிவித்தார். இதனால் அந்தப் பெண்ணிடம் விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். 

காவல் நிலையத்தில் அஜித்திடம் விசாரணை நடத்தியபோது அங்கு வந்த தேவிகா, என்னை மட்டுமல்லாமல் ஒவ்வொரு பெண்ணையும் திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றிவரும் உன்னை பெண் பாவம் சும்மா விடாது என்று ஆத்திரத்தில் கூறினார். அதைக் கேட்ட அஜித், அமைதியாக இருந்தார். பெண்களை எளிதில் நம்ப வைத்துவிடுவார் அஜித். திருமணமான சமயத்தில் தேவிகாவை அளவுக்கு அதிகமாக லவ் பண்ணியுள்ளார் அஜித். அப்போது அஜித்தின் சுயரூபம் தேவிகாவுக்கு தெரியவில்லை. அஜித்தை முழுமையாக நம்பிய தேவிகாவை அஜித் ஏமாற்றிய தகவல் ஜோதி மூலம் தெரிந்துள்ளது. இந்த வழக்கில் ஜோதி, டெலிலா ஆகியோரிடம் அஜித் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றார். 

Vikatan