Published:Updated:

`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்

ராம் பிரசாத்

ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை அரசுப் பள்ளியில், லேப்டாப் வழங்காததைக் கண்டித்து  எம்.எல்.ஏ-க்களை பள்ளி மாணவர்கள் முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள்மீது அ.தி.மு.க-வினர் தாக்குதலில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சரும் ஈரோடு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ, கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ தென்னரசு மற்றும் ஈரோடு டவுன் டி.எஸ்.பி முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது.  அதனைப் படம்பிடித்தபோது,   அ.தி.மு.க பிரமுகர், விகடன் நிருபர் நவீனின் சட்டையைப் பிடித்துத் தள்ளி, தாக்கியுள்ளார். மேலும்  'போனைக் குடு மொதல்ல, வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா' எனக் கூறிக்கொண்டே செல்போனைப் பிடுங்கி, கீழே தள்ளித் தாக்கியுள்ளனர்.  

`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்

இது நடந்துகொண்டிருந்தபோதே, எம்.எல்.ஏ, கே.வி.ராமலிங்கத்தின் மகனான ரத்தன் பிரித்திவ், இந்து தமிழ்ப் பத்திரிகையாளர் கோவிந்தராஜை கடுமையான வார்த்தைகளில் பேசி கன்னத்தில் அறைந்துள்ளார். இவ்வளவு நடந்தும், அறைக்குள் இருந்த சுமார்           10-க்கும் மேற்பட்ட போலீஸார் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர். ''என்ன சார், இவ்வளவு பத்திரிகையாளரைப் போட்டு அடிக்கிறாங்க... இவ்ளோ பிரச்னை நடக்குது, நீங்க வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க'' என செய்தியாளர்கள் கேட்க, அருகிலிருந்த ஈரோடு டவுஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வமோ, ''நீ யாருயா... எதுக்குயா உள்ள வந்த'' எனக் கடுமையாகப் பேசியுள்ளார். 

மாணவர்களுடன் எம்.எல்.ஏ-க்கள் பேச்சுவார்த்தை நடத்திய அறைக்குள் செய்தியாளர்கள் நுழைந்தபோதே, எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கத்தின் மகனும், ஈரோடு மாவட்ட மாணவரணிச் செயலாளரான ரத்தன் பிரித்திவ், 'நீ யாரு, எதுக்கு வீடியோ எடுக்கிற. ஒழுங்கா வெளியே போறியா இல்லையா...' எனப் பிரச்னை செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய எம்.எல்.ஏ தென்னரசு, 'ஓசியில் கொடுக்கிற லேப்டாப்புக்கு இவ்ளோ பிரச்னை பண்றீங்க' என மாணவர்களை மிரட்டினார். இதனையெல்லாம்  வீடியோவாகப் பதிவுசெய்ததால்தான், எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கத்தின் மகன் மற்றும் அ.தி.மு.க-வினர் தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலுக்குள்ளான செய்தியாளர்கள் இருவரும்  ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Vikatan