Published:Updated:

`மதத்தைக் காட்டி மகளைப் பிரித்துவிட்டடனர்’ - கோவை எஸ்பி-யிடம் புகாரளித்த தாய்!

குருபிரசாத்
`மதத்தைக் காட்டி மகளைப் பிரித்துவிட்டடனர்’ - கோவை எஸ்பி-யிடம் புகாரளித்த தாய்!
`மதத்தைக் காட்டி மகளைப் பிரித்துவிட்டடனர்’ - கோவை எஸ்பி-யிடம் புகாரளித்த தாய்!

'மகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி கும்பல்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோவை போலீஸ் எஸ்.பி-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

`மதத்தைக் காட்டி மகளைப் பிரித்துவிட்டடனர்’ - கோவை எஸ்பி-யிடம் புகாரளித்த தாய்!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், முனிரத்தினம். இவரது மகள், பூங்கோதை (20). தனது மகளை மூளைச்சலவை செய்து, மதம் மாற்றி தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாக, கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி-யிடம் முனிரத்தினம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து முனிரத்தினம், “பூங்கோதை பிறந்தவுடனேயே, என் கணவர் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். அம்மாவின் வீட்டில் இருந்துதான் குழந்தையை வளர்த்தேன். நான் தர்மபுரியில் இருந்தபடி, கூலி வேலை செய்துவருகிறேன். பூங்கோதை, கோவையில் உள்ள எனது தம்பியின் வீட்டில் தங்கி இன்ஜினீயரிங் படிப்பை முடித்தார். படிப்பு முடிந்தவுடன், ஹாஸ்டலில் தங்கி வேலைக்குச் செல்வதாகக் கூறினாள். ஆனால், வீட்டுக்கு பணமே கொடுக்கவில்லை. ஹாஸ்டல் சென்று விசாரித்ததில், பூங்கொடி வேலைக்குச் செல்லவில்லை என்று தெரியவந்தது.

பிறகு, திருச்சியில் வேலை கிடைத்திருப்பதாகக் கூறி அங்குச் சென்றாள். இதையடுத்து, அவளது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால், மீண்டும் வீட்டுக்கே அழைத்துவந்தோம். ஆனால், கல்லூரித் தோழிகளான பாரதி மற்றும் சாரா மூலம், அவள் மீண்டும் வீட்டை விட்டு சென்றாள். போலீஸில் புகார் அளித்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த பூங்கோதை, கழுத்தில் சிலுவை டாலருடன் ஒரு பாசியை அணிந்திருந்தாள். எது கேட்டாலும் பதில் இல்லை. வாயில் ஏதோ ஜெபத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கிறாள்.

`மதத்தைக் காட்டி மகளைப் பிரித்துவிட்டடனர்’ - கோவை எஸ்பி-யிடம் புகாரளித்த தாய்!

பூங்கோதை

இந்நிலையில், திருச்சியில் இருந்து வந்த சிலர், என் மகளை மீண்டும் திருச்சிக்கே அழைத்துச்சென்றுவிட்டனர். என் மகளை மூளைச்சலவை செய்துதான் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியுள்ளனர். அவள், எங்களின் பேச்சை கேட்பதே இல்லை. வீட்டுக்கும் வருவதில்லை. என் மகளை மூளைச்சலவை செய்த கும்பல்மீது நடவடிக்கை எடுத்து, மகளை மீட்டுத்தர வேண்டும்” என்றார் கண்ணீருடன்.

Vikatan