Published:Updated:

நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்!

வீ கே.ரமேஷ்
நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்!
நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்!
நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்!

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துத் தோல்வியடைந்ததால் மருத்துவர் ஆக முடியாது என்ற விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் பாரதபிரியன் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதால் தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர்கள் மரணமடைந்த மாணவரின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறுவதோடு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு டெய்லரிங் தொழிலாளி. இவரின் மனைவி ராசாத்தி இவர் கட்டடம் கட்டும் கொத்து வேலை செய்யக்கூடிய கூலித் தொழிலாளி. இவர்களுக்கு மதுமிதா என்ற மகளும் பாரதபிரியன் என்ற மகனும் இருக்கிறார்கள். மதுமிதா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார். இளைய மகன் பாரதபிரியன் எடப்பாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு ப்ளஸ் டூ முடித்துள்ளார். இவர் ப்ளஸ் டூவில் 425 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மருத்துவர் ஆக வேண்டுமென்பது இவருடைய கனவாக இருந்துள்ளது. தன்னுடைய நோட்டு, புத்தகங்களில் டாக்டர் பாரதபிரியன் என்று எழுதி வைத்துள்ளார்.

அதனால் மருத்துவ படிப்புக்கு நுழைவுதற்கான நீட் தேர்வு வீட்டில் இருந்தே படித்தே எழுதியுள்ளார். நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு வெறும் 111 மதிப்பெண் எடுத்ததால் மருத்துவம் படிக்க முடியாது என்று கருதி மன வேதனை அடைந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் பட்டுகோட்டை வைஷியா, திருப்பூர் ரிதுஶ்ரீ, விழுப்புரம் மோனிஷா வரிசையில் தற்போது தமிழக முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியிலும் நீட் தேர்வு தோல்வியால் மாணவர் பாரதபிரியன் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர்கள் பாரதபிரியன் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவிப்பதோடு நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தவும் முடிவெடுத்து வருகிறது.

Vikatan