Published:Updated:

`இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வேறலெவல்!'- ஆச்சர்யப்பட வைக்கும் கிராம மக்கள்

பாலமுருகன். தெ
`இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வேறலெவல்!'- ஆச்சர்யப்பட வைக்கும் கிராம மக்கள்
`இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வேறலெவல்!'- ஆச்சர்யப்பட வைக்கும் கிராம மக்கள்

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி தேர்ச்சி விகிதத்தில் கீழ் நிலையில் இருந்த அரசுப் பள்ளி தற்போது தொடர்ந்து நூறு சதவிகிதம் தேர்ச்சியடைந்து வருகிறது. இதற்காக அப்பள்ளியின் ஆசிரியர்களின் கடுமையான உழைப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர்களுக்குத் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

`இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வேறலெவல்!'- ஆச்சர்யப்பட வைக்கும் கிராம மக்கள்


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அமைந்துள்ளது கல்லூரணி கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 130 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 39 மாணவ மாணவிகள் எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சியடைந்தனர். இதற்குக் காரணமாக இருந்த 6 ஆசிரியர்களுக்குத் தங்க மோதிரம் அணிவிக்கும் விழா அக்கிராமத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்குமாரிடம் பேசினோம். ``கடந்த 8 வருடத்துக்கு முன் இந்தப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. கல்வித்துறையில் இருந்து என்னிடம் பேசினார்கள். அதன்பிறகு மாலை நேரத்தில் டியூஷன். அங்கே படிக்க வரும் மாணவ மாணவிகளுக்கு டீ, ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்தோம். நூறு சதவிகிதம் பள்ளியில் தேர்ச்சி விகிதம் காட்டும் ஆசிரியர்களுக்கு தங்கமோதிரம் பரிசு என்று அறிவித்தேன். பரிசு அறிவித்த அடுத்தாண்டு ஒரு மாணவன் மட்டும் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததால் அந்தாண்டு நூறு சதவிகிதம் இலக்கை அடையமுடியவில்லை.

அதற்கு அடுத்தாண்டிலிருந்து சென்ற கல்வியாண்டு வரைக்கும் நூறு சதவிகிதம் தேர்ச்சி அடைந்து வருகிறது. இந்த தேர்ச்சியைக் கொடுக்கும் ஆசிரியர்கள் 6 பேருக்கும் அரை பவுன்தங்க மோதிரம் பரிசாக வழங்கி வருகிறேன். தொடர்ந்து ஏழு வருடங்களாக இந்த தேர்ச்சியை பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். இந்த வெற்றியை நான் மட்டுமல்ல; எங்கள் கிராம மக்கள் கல்வித்துறை அதிகாரிகளோடு சேர்ந்து விழாவாகக் கொண்டாடி வருகிறோம். அன்றைக்குப் பள்ளி மாணவர்கள் கிராம மக்கள் அனைவருக்கும் உணவு விருந்தளித்து மகிழ்ச்சியோடு இந்த வெற்றியைக் கொண்டாடுவோம். என் அம்மா மீனாட்சி அதே பள்ளியின் ஆசிரியர். அவரின் சொந்தப் பணத்திலிருந்து பத்தாயிரம் ரூபாயை, பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்களுக்கு வழங்கி வருகிறார். கல்விக் கண் திறந்து பார்த்தால்தான் அதன் மகிழ்ச்சியும் அருமையும் தெரியும்'' என்கிறார்.

Vikatan