Published:Updated:

`மறுதேர்வு நடத்துவதே நியாமானது!'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M
`மறுதேர்வு நடத்துவதே நியாமானது!'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்
`மறுதேர்வு நடத்துவதே நியாமானது!'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்
`மறுதேர்வு நடத்துவதே நியாமானது!'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்

தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் 814 காலியாக உள்ளன. அந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த 23-ம் தேதி தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில், சுமார் 25,806 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதுபவர்கள், உரிய நேரத்தில் தேர்வு எழுத முடியாமல் குளறுபடி நேர்ந்தது. அதையடுத்து, தேர்வு மையத்தில் முறையாகத் தேர்வு எழுதாமல் ஒருவரை ஒருவர் கேட்டு ஆலோசித்தும், காப்பி அடித்தும் தேர்வு எழுதிய வீடியோ வெளிவந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

`மறுதேர்வு நடத்துவதே நியாமானது!'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்

அதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம்  தேர்வில் குளறுபடி ஏற்பட்ட திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரி, கும்பகோணம் அன்னை கல்லூரி, திருச்சியில் உள்ள கொங்குநாடு கல்லூரி ஆகிய மையங்களில் தேர்வு எழுதிய 1211 நபர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படுவதாகவும்  தேர்வு,  வரும் 27-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. `ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பு தவறானது. இதனால், பலர் பாதிக்கப்படுவார்கள். ஆசிரியர்கள் தகுதித் தேர்வைப் போல ஓ.எம்.ஆர் சீட்டில் நடத்த வேண்டும். ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தியது தவறு' என எதிர்ப்பு தெரிவித்து,  கணினி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு எழுதியவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

`மறுதேர்வு நடத்துவதே நியாமானது!'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்

இதுபற்றி கணினி ஆசிரியர் தேர்வு எழுதிய லலிதா கூறுகையில், ``கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் எழுதியதால் பெரும்பாலான தேர்வு மையங்களில் கணினிகள் பழுதடைந்தும், ஆன்லைன் டவர் கிடைக்காமலும் இருந்ததால், ஒருவரை ஒருவர் பார்த்தும், காப்பி அடித்தும் தேர்வு எழுதும் சூழ்நிலை நிலவியது. இது, ஏதோ 3 கல்லூரிகளில் மட்டும் நடந்ததாகக் கூறி, ஆசிரியர் தேர்வு வாரியம்  அந்த 3 மையங்களில் தேர்வு எழுதியவகளுக்கு மட்டுமே மறு தேர்வு என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், தேர்வு நடைபெற்ற பல கல்லூரிகளில் இந்தப் பிரச்னை இருந்தது. அதனால், மறுதேர்வு நடத்துவது மட்டுமே நியாயமானது'' என்றார்.

கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதிய தமிழ் கூறுகையில், ``கணினி ஆசிரியர் தேர்வு தமிழகம் முழுவதும் சரியாக நடக்கவில்லை. பெரும்பாலான கல்லூரிகளில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. அதனால் ஒட்டுமொத்தமாக இத்தேர்வை நீக்கிவிட்டு மீண்டும் புதியதாக தேர்வு நடத்த வேண்டும். மாநில அரசின் கீழ் வரும் கல்விப் பணிக்கு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வேலை இல்லாதபோது, மாற்று மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு வேலை கொடுப்பது நியாயமில்லை. அதனால், வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது'' என்றார்.