Published:Updated:

``அவர் ஒரு டுபாகூர்" - கோவையில் அமைச்சர் குறித்து எ.வ.வேலு சர்ச்சை பேச்சு!!

குருபிரசாத்
``அவர் ஒரு டுபாகூர்" - கோவையில் அமைச்சர் குறித்து எ.வ.வேலு சர்ச்சை பேச்சு!!
``அவர் ஒரு டுபாகூர்" - கோவையில் அமைச்சர் குறித்து எ.வ.வேலு சர்ச்சை பேச்சு!!

அமைச்சர் வேலுமணி ஒரு டுபாகூர் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர்  எ.வ.வேலு கூறியுள்ளார்.

சூலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், சூலூர் தொகுதி தி.மு.க பொறுப்பாளருமான எ.வ.வேலு பேசுகையில், ``ஏற்காடு இடைத்தேர்தல் சமயத்தில் பொறுப்பாளராக பணிகள் செய்துகொண்டிருந்தபொழுது என் மீது சேலம் காவல்நிலையத்தில் பொய் வழக்கு போட்டவர் எஸ்.பி.வேலுமணி. அப்போது, நான் ஏற்காட்டிலேயே இல்லை. கோவையில் இருந்தேன். அந்த வழக்கின் மூலம், இழந்த தனது அமைச்சர் பதவியை வேலுமணி மீண்டும் பெற்றுக்கொண்டார்.  தி.மு.க தொண்டன் வழக்கிற்குப் பயந்தவர்கள் அல்ல. இப்போது அறப்போர் இயக்கம் வேலுமணி மீது வழக்கு போட்டுள்ளது. எஸ்.பி்.வேலுமணி பல்வேறு பினாமி நிறுவனங்கள் நடத்தி பல கோடி, ஊழல் செய்துள்ளார்.

வேலுமணியை நான் முதன் முதலில் சட்டசபையில் பார்த்தபோது, மீசை இருந்தது. பிறகு பார்த்தபோது மீசை இல்லை. இன்னும் சில நாள்கள் கழித்து பார்த்தபோது, தலைக்கு மருதாணி அடித்து வரத்தொடங்கினார். `அமைச்சர் பதவி நிலைக்க வேண்டுமென்றால், இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று ஜோசியக்காரர் சொல்லியதால், அவர் இப்படி வலம் வருகிறார். தற்போது, முகத்துக்கு மஞ்சள் பூசிக் கொண்டு சட்டசபை வருகிறார். வேலுமணி ஒரு டுபாகூர் பார்ட்டி. சூலூரில், 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி வெற்றி பெறுவார்" என்று பேசினார்.