Published:Updated:

`தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்!’ -  எங்கே அந்தக் கல்வெட்டு?

ராம் பிரசாத்
`தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்!’ -  எங்கே அந்தக் கல்வெட்டு?
`தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்!’ -  எங்கே அந்தக் கல்வெட்டு?
`தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்!’ -  எங்கே அந்தக் கல்வெட்டு?

‘தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்’...குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில்  கல்வெட்டில் பதிக்கப்பட்ட இந்தப் பெயர் சர்ச்சையைக் கிளப்பியது. என்னப்பா வாக்கு எண்ணிக்கையே நடக்கல அதுக்குள்ள கல்வெட்டா என பொங்கினர் எதிர்க்கட்சிகள்.   கல்வெட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த அவசர அவசரமாகக் கல்வெட்டு மறைக்கப்பட்டது. கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.  வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது ஓ.பி.எஸ், தன் குடும்பத்தினருடன் சென்றது. இதையடுத்து கல்வெட்டு வைக்கப்பட்டது எல்லாம் விமர்சனத்துக்குள்ளானது.  ரவீந்திரநாத் குமார் தோற்றாலும் பா.ஜ.க தயவில் எம்பி ஆகிவிடுவார் போல. அதனால்தான் அவரது ஆதரவாளர்கள் கல்வெட்டை வைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கும் வருமா என்ற கேள்வியும் இருந்தது. கல்வெட்டு குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ சைலன்ட் மோடுக்கே சென்றுவிட்டார். 

`தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்!’ -  எங்கே அந்தக் கல்வெட்டு?

`தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறானது. என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிக்கை வெளியிட்டார் ரவீந்திரநாத் குமார்.  இந்த நிலையில் தான் ஓ.பன்னீர்செல்வத்தின் மீதும் அவரின் மகன் மீதும் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.  ‘மகன் தோற்றுவிடுவார் என்பதால் மகனுக்கு ராஜ்யசபா பதவி வேண்டும், தனக்கு ஆளுநர் பதவி வேண்டும் என்பதற்காக வாரணாசிக்கு ஓ.பி.எஸ் சென்றதாக’ தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்தார். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. 

ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேனியில் தொடக்கத்தில் இழுபறி இருந்தது. இதைத்தொடர்ந்து ரவீந்திரநாத் குமார் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார். தமிழகத்தில் 37 தொகுதிகளிலும் தி.மு.க முன்னிலையில் உள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நாடு முழுவதும் பா.ஜ.க 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் வகிக்கிறது. சனிபகவான் கோயில் கல்வெட்டில்  சர்ச்சையில் சிக்கிய ரவீந்திரநாத் சனீஸ்வரன் அருளால் முன்னிலையில் உள்ளார். இந்தக் கல்வெட்டு விவகாரம் அந்த சனீஸ்வரனுக்கே வெளிச்சம்.

Vikatan