Published:Updated:

`25 வருட நட்பைப் பிரித்த அரசியல் கூட்டணி.. ஒன்றுசேர்த்த தேர்தல் முடிவு!' - கரூர் பெண்களின் கதை

துரை.வேம்பையன்
`25 வருட நட்பைப் பிரித்த அரசியல் கூட்டணி.. ஒன்றுசேர்த்த தேர்தல் முடிவு!' - கரூர் பெண்களின் கதை
`25 வருட நட்பைப் பிரித்த அரசியல் கூட்டணி.. ஒன்றுசேர்த்த தேர்தல் முடிவு!' - கரூர் பெண்களின் கதை

நடந்துமுடிந்த தேர்தலில் அ.தி.மு.க-வோடு பி.ஜே.பி கூட்டணி வைத்ததால், பிரிந்த தோழிகள் இருவர், தேர்தல் முடிவுக்குப் பிறகு லட்டுக் கொடுத்து ஒன்றுசேர்ந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பேசும்பொருளாக மாறி இருக்கிறது.

`25 வருட நட்பைப் பிரித்த அரசியல் கூட்டணி.. ஒன்றுசேர்த்த தேர்தல் முடிவு!' - கரூர் பெண்களின் கதை

கடந்த மாதம் 18 ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஆகிய மாநிலங்களில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கடந்த 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது, கட்சிகளின் வெற்றி தோல்வி நிலவரம் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலையொட்டி, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க கட்சி, தேசியக் கட்சியான பி.ஜே.பியோடு கூட்டணி வைத்தது. தி.மு.கவோ, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்தது.

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த லட்சுமி மற்றும் சர்மிளா பானு என்ற தோழிகளை இந்தக் கூட்டணி விவகாரம் பிரித்தது. அதாவது, லட்சுமியின் குடும்பம் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அ.தி.மு.க-வை தீவிரமாக ஆதரிக்கும் குடும்பம். அதற்கு நேர்மாறாக சர்மிளா பானுவின் குடும்பமோ, பரம்பரையாக தி.மு.க-வை ஆதரிக்கும் குடும்பம். கட்சி விஷயங்களில் அந்தந்தக் கட்சிகளுக்கு லட்சுமியும், சர்மிளா பானுவும் தீவிரமாகப் பணியாற்றி வந்திருக்கிறார்கள். கட்சிகளில் எந்த பொறுப்புகளிலும் இருவரும் இல்லை என்றாலும், கட்சிக்காக தன்னார்வமாக ஓடியாடி உழைத்திருக்கிறார்கள். 

`25 வருட நட்பைப் பிரித்த அரசியல் கூட்டணி.. ஒன்றுசேர்த்த தேர்தல் முடிவு!' - கரூர் பெண்களின் கதை

தோட்டக்குறிச்சி பகுதியில் கூட்டத்துக்கு ஆள் திரட்டுவது, தேர்தல் காலங்களில் வீடுவீடாக சென்று வாக்கு கேட்பது என்று இவர்கள் இருவரும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். கட்சி வேறுபாடு கடந்து இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்திருக்கிறார்கள். இந்நிலையில், அ.தி.மு.க கட்சி பி.ஜே.பியோடு கூட்டணி வைக்க, அது லட்சுமிக்கும், சர்மிளா பானுவுக்கும் இடையில் விரிசலை

`25 வருட நட்பைப் பிரித்த அரசியல் கூட்டணி.. ஒன்றுசேர்த்த தேர்தல் முடிவு!' - கரூர் பெண்களின் கதை

உண்டாக்கியது. `மதவாத கட்சியாக முத்திரைக் குத்தப்பட்ட பி.ஜே.பி-யோடு உங்க கட்சி எப்படி கூட்டணி வைக்கலாம்?' என்று சர்மிளா பானு வாக்குவாதம் செய்திருக்கிறார். பதிலுக்கு, `ஈழத்தில் தமிழர்கள் அழிக்கப்பட மறைமுக காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியோடு உங்க கட்சி மட்டும் கூட்டணி வைக்கலையா?' என்று பதில் வாதம் செய்ய, இருவருக்கும் இடையில் விரிசல். 25 வருட நட்பும் முதன்முறையாக முறிந்தது. இதனால், கடந்த ஒருமாதத்திற்கு மேலாக இருவரும் பாம்பும், கீரியும்போல எதிரிகளாக மாறிபோனார்கள். யதேச்சையாக இருவரும் பார்க்க நேர்ந்தால்கூட, முகத்தை திருப்பிக்கொண்டு போயிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான், கடந்த 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட, பி.ஜே.பி தமிழகத்தில் ஒருஇடத்தில்கூட வரவில்லை என்பது தெரிந்தது. இதனால், இருவரும் இப்போது மறுபடியும் சுமுகமாகிவிட்டார்கள். ஒருவருக்கு ஒருவர் லட்டு கொடுத்து, பிரிந்த நட்பை மறுபடியும் பசைபோட்டு ஒட்ட வைத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம், கரூர் மாவட்டத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

இதுகுறித்து, லட்சுமியிடம் பேசினோம். ``நாங்க மதவேறுபாடு கடந்து, 25 வருஷமா உயிர்த்தோழிகளாக பழகிட்டு வந்தோம். சொந்த அக்கா தங்கச்சிக்கூட அப்படி பழகமாட்டாங்க. ஆனா, நாங்க அப்படி உயிருக்கு உயிராக பழகி வந்தோம். எங்க போனாலும் ஒண்ணாதான் போவோம்; வருவோம். இன்னொருபக்கம், கட்சி விஷயத்திலும் ரொம்பத் தீவிரமா இருப்போம். நான் அ.தி.மு.கவோட தீவிர ரசிகை. சர்மிளா தி.மு.க கட்சியை நேசிப்பவள். இருவரும் அவரவர் கட்சிக்காக பிரதிபலன் இல்லாமல் தீவிரமாக உழைப்போம்.

இந்தச் சூழல்தான், அ.தி.மு.க-வோடு பி.ஜே.பி கூட்டணி வைக்க, அது எங்களுக்குள்ள விரிசலை உண்டாக்கியது. `அக்னி நட்சத்திரம்' கார்த்திக், பிரபுபோல முறுக்கிக்கிட்டு திரிஞ்சோம். அப்புறம், தேர்தல் முடிவில் பி.ஜே.பி ஒரு இடத்தைகூட தமிழகத்தில் பெறாமல் போகவும்தான், `கட்சி விஷயத்துக்காக நாம பிரியலாமா?'னு ரெண்டு பேருக்கும் உறைச்சுச்சு. உடனே, பிரிஞ்சுகிடந்த இருவரும் ஒண்ணுசேர்ந்துட்டோம். மாறி மாறி லட்டு கொடுத்து, அரவணைச்சுக்கிட்டோம். அதோட, `நாம உழைச்சாதான் காசு. இனி எந்த விஷயத்துக்காகவும் நாம பிரியலாம். ஆனா, கட்சி விஷயத்துக்காக மட்டும் பிரியவே கூடாது. யார் யாரோட கூட்டணி வச்சா நமக்கு என்ன?'ங்கிற தெளிவுக்கும் வந்திருக்கிறோம். இனி சாவுறவரைக்கும் எங்களை எந்த விஷயத்தாலும் பிரிக்கவேமுடியாது" என்றார். 

Vikatan