Published:Updated:

`அதிகாரிகளைக் கடைக்குள் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்' - தஞ்சாவூரில் ஆய்வுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!

கே.குணசீலன்

தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா எனச்  சோதனை செய்வதற்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகளைக் கடையின் உள்ளே வைத்து அதன் ஊழியர்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

`அதிகாரிகளைக் கடைக்குள் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்' - தஞ்சாவூரில் ஆய்வுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்திருந்தது தமிழக அரசு. மேலும் பிளாஸ்டிக் தடை கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடும் குறைந்தது. இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வந்தது. அரசின் உத்தரவு காற்றில் பறக்கும் அளவுக்கு மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தொடங்கினர் வியாபாரிகள். இதையடுத்து தமிழக அரசு பிளாஸ்டிக் விற்பனை செய்தாலோ, உற்பத்தி செய்தாலோ அல்லது பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டாலோ அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டக் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்க அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி நகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இன்று கீழவாசல் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மார்க்கெட் ரோடு பகுதியில் சங்கர், என்பவருக்குச் சொந்தமான சங்கர் பட்டாசுக் கடையை, 4 துப்புரவு ஆய்வாளர்கள், இரண்டு பெண் மேற்பார்வையாளர் என மொத்தம் 6 பேர் கடைக்குள் சென்று பிளாஸ்டிக் பொருள்கள் எதுவும் உள்ளதா? எனச் சோதனை செய்தனர்.

`அதிகாரிகளைக் கடைக்குள் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்' - தஞ்சாவூரில் ஆய்வுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!

அப்போது கடைக்குள் இருந்த, 2 ஊழியர்கள் திடீரென வெளியே ஓடி வந்து கடையின் ஷட்டரை இழுத்து மூடினர். மேலும், கடைக்கு செல்லும் மின் இணைப்பையும் துண்டித்துவிட்டு ஓடிவிட்டனர். கடைக்குள் மாட்டிக்கொண்ட பெண் உட்பட 6 அதிகாரிகளும் இதில் பயந்து போய் அலறி ஷட்டரை வேகமாகத் தட்டியுள்ளனர். அப்போது வெளியே நின்றிருந்த நமச்சிவாயம் உள்ளிட்ட ஊழியர்கள், கடையின் ஷட்டரை திறந்து அதிகாரிகள் 6 பேரையும் மீட்டனர். பின்னர் கடையில் இருந்த 50 கிலோ மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தஞ்சைக் கிழக்கு போலீஸில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸார் கடையின் உரிமையாளர் சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vikatan