Published:Updated:

`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது!' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

துரை.வேம்பையன்

சொந்த உறவுகளுக்குக்கூட உதவிசெய்ய மனமிறங்காதவர்கள் மலிந்துவிட்ட காலமிது. இந்நிலையில், தான் அரசு வேலையில் நன்றாக இருந்தாலும், தனது கிராம மக்கள் குடிநீருக்காக அல்லாடக்கூடாது என்பதற்காக, சொந்தச் செலவில், குடும்பம் சகிதமாக சொந்த ஊரில் உள்ள குளத்தைத் தூர் வாரி நெகிழ வைத்திருக்கிறார், அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர். அதோடு, "மாதத்திற்கு ஒரு குளத்தை நண்பர்கள், மற்ற அமைப்புகளோடு சேர்ந்து தூர் வாரப்போகிறோம்" என்றும் சொல்லி அசரவைக்கிறார்.

`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது!' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது, ஆனந்தகவுண்டனூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர், திருநாவுக்கரசு. இவர், தென்னிலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இந்தக் கிராமம் மட்டுமின்றி, அருகில் உள்ள சில கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை உள்ளது. இதற்குக் காரணம், இந்தக் கிராமத்தில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆனந்தகவுண்டனூர் குளம் வறண்டுபோனதுதான்.

`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது!' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

இந்தக் குளம், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்புதான் நிரம்பியது. அதன்பிறகு, இந்தக் குளம் தூர்ந்துபோய்விட்டது. அதோடு, இந்தக் குளத்திற்கு அருகில் உள்ள வெள்ளியணை ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் வாய்க்காலும் தூர்ந்துபோயிருக்கிறது. இதனால், வருத்தப்பட்ட ஆசிரியர் திருநாவுக்கரசு, கிராம மக்களை அழைத்து, 'குளத்தை நாமே தூர் வாருவோம்' என்று கேட்டிருக்கிறார். அவர்களும், 'சரி' என்று சொல்ல, முதல்கட்டமாகத் தனது சொந்தப் பணம் 32,000 ரூபாயை குளம் தூர் வாருவதற்காகப் போட்டிருக்கிறார். 

`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது!' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

அதன்பிறகு, ஜே.சி.ஐ கரூர் சிட்டி அமைப்பினர் 10,000 ரூபாயும் கரூர் சுற்றுச்சூழல் மன்றம் 3,000 ரூபாயும், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்டோருடன் கிராம மக்களும் சேர்ந்து  3,000 ரூபாய் பங்களிப்புச் செய்ய, ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் நிதி சேர்ந்துள்ளது. கூடவே, கரூர் ஊரகவளர்ச்சித்துறை திட்ட அலுவலர் கவிதா, தங்கள் துறையின் கீழ் குளத்தை தூர் வாரிய பின், குளத்தைச் சுற்றி 100 மரக்கன்றுகளை வைப்பதாக உத்தரவாதம் கொடுத்தார். தனது மனைவி, தாய், மகன்கள் சகிதம் தூர் வாரும் காரியத்தில் இறங்கினார் திருநாவுக்கரசு.

`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது!' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

ஊர்மக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று கைகோக்க, ஒரே வாரத்தில் குளத்தைத் தூர் வாரி ஆழப்படுத்திவிட்டார்கள்; அந்த மண்ணைக்கொண்டே குளத்தின் கரையையும் பலப்படுத்தியிருக்கிறார்கள். அதோடு, இந்தக் குளத்திற்கு வெள்ளியணை ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து சேர்க்கும் தூர்ந்துகிடந்த வாய்க்காலையும் 2 கிலோமீட்டர் தூரத்திற்குத் தூர் வாரி முடித்திருக்கிறார்கள். ஊரகவளர்ச்சித்துறையும், சொன்னபடி குளத்தைச் சுற்றி ஆலம் உள்ளிட்ட 100 மரக்கன்றுகளை நட்டுமுடித்திருக்கிறது.

`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது!' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

வெற்றிக்களிப்பில் இருந்த ஆசிரியர் திருநாவுக்கரசுவிடம் பேசினோம். "இந்தக் குளத்தில் தண்ணி நிரம்பினால், எங்க ஊர்மட்டுமல்ல, அருகில் உள்ள குப்பகவுண்டனூர், கும்மாயம்பட்டி, பொரணி உள்ளிட்ட பல ஊர்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சில வருடங்களாக இந்தக் குளத்தில் தண்ணீர் தேங்காததால், இந்தப் பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் 1,000 அடிக்குக் கீழே போய்விட்டது. இதே நிலைமை நீடிச்சா, ஊர்ல சொட்டுநீர்கூட கிடைக்காது என்கிற நிலைமை. அதனால்தான், ஊர்மக்களை அடிக்கடிகூட்டிப் பேசி ஒத்துக்கவச்சு, குளத்தை வெற்றிகரமா தூர் வாரி முடிச்சிருக்கோம். நான் குடும்பத்தோடு தூர் வாருகிற வேலையில் கலந்துகிட்டேன். ஒருவாரம் வேலை நடந்தது. சிறப்பா குளத்தைத் தூர் வாரிட்டோம். மழைக்காலத்தில் இந்தக் குளம் முழுமையா நிரம்பும். 

`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது!' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

மூணு வருஷம் வரை அது தாங்கும். நாங்க குளம் வெட்டுற அன்னைக்கு, எங்க பக்கத்தூரைச் சேர்ந்த ஒரு ஜோடிக்கு திருமணம். நாங்க தூர் வாருறதை கேள்விப்பட்ட அவங்க, திருமணம் முடிஞ்ச கையோடு வந்து, எங்க பணிக்கு உதவியதோடு, மரக்கன்றுகளையும் நட்டாங்க. ஆசிரியர்களாகச் சேர்ந்து, 'இயற்கை நண்பர்கள் குழு'ன்னு ஒண்ணை வச்சிருக்கோம். இந்த அமைப்பு மூலமா, ஒவ்வொரு மாதமும் கரூர்ல உள்ள ஒவ்வொரு குளத்தையும் தூர் வாரலாம்னு இருக்கோம். அடுத்த குளமா, பொரணியில் உள்ள ஒரு குளத்தைத் தூர் வாரலாம்னு இருக்கோம். அரசை மட்டும் குறை சொல்லிட்டு இருக்காம, ஒவ்வொரு கிராம மக்களும் இப்படித் தங்களது நீர்நிலைகளைக் காக்க புறப்பட்டா, தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம்; குடிநீர் பஞ்சம்னு ஒண்ணு இந்த யுகத்துக்கு வராது" என்றார் முத்தாய்பாக.

Vikatan