Published:Updated:

`இது அவசரகால அறிவிப்பு!' - சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம்

ராம் பிரசாத்
`இது அவசரகால அறிவிப்பு!' - சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம்
`இது அவசரகால அறிவிப்பு!' - சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம்

மெட்ரோ ரயில் சேவை, சென்னைவாசிகளுக்கு வரப்பிரசாதம்போல அமைந்தது. போக்குவரத்து நெரிசலைத் தவிக்க மேற்கொள்ளப்பட்ட மெட்ரோ ரயில் வருகையால், பல மணி நேர பயணம் சற்று குறைந்தது. வாரத்தின் முதல் நாளான இன்று, பணி முடிந்து வீடு திரும்ப ஏராளமானோர் மெட்ரொ ரயில் நிலையத்திற்குப் படையெடுத்தனர். ரயில் நிலையத்தை விட்டு பயணிகள் உடனடியாக வெளியேறுங்கள் என்ற  அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.  ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டது தொடர்பாக  நிர்வாகத்தைக் கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கம் அமைத்ததற்காக ஊழியர்களை சஸ்பெண்டு செய்தது நியாயமற்றது என்றும், அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.  ஊழியர்களின் போராட்டத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், திருமங்கலம் மெட்ரொ ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவரும் வெளியேறுமாறு அறிவிப்பு வெளியானது.  காரணம் புரியாமல் பயணிகள் அங்கிருந்து சென்றனர். மெட்ரொ ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாளையும் வேலை நிறுத்தம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்தநிலையில், சென்னையில், நாளை காலை மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் தொழிலாளர் நலத்துறை, மெட்ரோ நிர்வாகம் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், தற்காலிக ஊழியர்களைக்கொண்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.