Published:Updated:

`எங்க தாலியைக் காப்பாத்துங்க!'- டாஸ்மாக்கை அகற்ற கலெக்டரிடம் பெண்கள் கண்ணீர்

எம்.திலீபன்
`எங்க தாலியைக் காப்பாத்துங்க!'- டாஸ்மாக்கை அகற்ற கலெக்டரிடம் பெண்கள் கண்ணீர்
`எங்க தாலியைக் காப்பாத்துங்க!'- டாஸ்மாக்கை அகற்ற கலெக்டரிடம் பெண்கள் கண்ணீர்

"எங்களுடைய போராட்டத்திற்குப் பயந்து, 'டாஸ்மார்க் கடையை அகற்றிவிடுகிறோம்' என்று போலீஸார் உத்தரவாதம் கொடுத்தார்கள். ஆனால், இன்று வரையிலும் கடையை அகற்றவில்லை. குடும்பப் பெண்களின் தாலியையும் பிள்ளைகளின் வாழ்க்கையையும் காப்பாற்றுங்கள்" என்று சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆட்சியரிடம் மனுக்கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`எங்க தாலியைக் காப்பாத்துங்க!'- டாஸ்மாக்கை அகற்ற கலெக்டரிடம் பெண்கள் கண்ணீர்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பெரியாக்குறிச்சி சாலையில் உள்ள முந்திரி வயலில், அரசு டாஸ்மாக் கடை நீண்ட நாள்களாகச் செயல்பட்டுவந்தது. இந்த டாஸ்மாக் கடையால் வயல்களுக்குச் செல்லும் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளிடம் குடிமகன்கள் குடித்துவிட்டுக் கிண்டல் செய்துள்ளனர். இதனால், பெண்கள் அப்பகுதியைக் கடந்துசெல்லவே அச்சப்படும் சூழல் உள்ளது என்று பொது மக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் மசியவில்லை. அடுத்த கட்டமாக, டாஸ்மாக் கடையைத் திறக்கவிடாமல் தடுத்துநிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். வேறு வழியில்லாமல் அதிகாரிகளும், செந்துறை போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த 24-ம் தேதிக்குப் பிறகு, 'கடை இப்பகுதியில் இயங்காது' என்று உறுதியளித்தனர். ஆனால், அந்த டாஸ்மாக் கடை மீண்டும் அதே இடத்தில் இயங்கிவருகிறது. இந்தக் கடையை உடனே அகற்ற வேண்டும், இல்லை என்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம்" என ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு, குடியால் அவர்கள் படும் பாட்டையும் கண்ணீர்விட்டு தெரிவித்துவிட்டு வந்தனர்.

`எங்க தாலியைக் காப்பாத்துங்க!'- டாஸ்மாக்கை அகற்ற கலெக்டரிடம் பெண்கள் கண்ணீர்

புகார் கொடுத்துவிட்டு வந்த சில பெண்களிடம் பேசினோம். "இந்த டாஸ்மாக் கடையால் நாங்கள் தொடர்ந்து பிரச்னையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, டாஸ்மாக் கடையை இப்பகுதியிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினோம். அதன் பேரில் அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதாக ஒத்துக்கொண்டார்கள். ஆனால், இன்று வரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? எங்களுடைய போராட்டத்தைத் திசைதிருப்ப வேண்டும் என்று காவல் துறையினர் நினைத்தார்களா இல்லை... டாஸ்மாக் கடையில் வரும் கமிஷனுக்காக இப்படி நடந்துகொண்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த டாஸ்மாக் கடை இருந்தால் எங்கள் குடும்பங்கள் அழிந்துபோகும். எனவே, பெண்களின் தாலியையும் மாணவ- மாணவிகளின் படிப்பையும் காக்க வேண்டும் என ஆட்சியரிம் மனு அளித்துள்ளோம். அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்" என்று எச்சரித்தனர்.

Vikatan