Published:Updated:

`பேச்சிலர்களின் சொர்க்கம் மூடப்பட்டது!’ - தண்ணீரின்றித் தவிக்கும் திருவல்லிக்கேணி

விகடன் விமர்சனக்குழு
`பேச்சிலர்களின் சொர்க்கம் மூடப்பட்டது!’ - தண்ணீரின்றித் தவிக்கும் திருவல்லிக்கேணி
`பேச்சிலர்களின் சொர்க்கம் மூடப்பட்டது!’ - தண்ணீரின்றித் தவிக்கும் திருவல்லிக்கேணி

சென்னையில் தலைவிரித்தாடும் குடிநீர் பற்றாக்குறையின் எதிரொலியாக, திருவல்லிக்கேணியில் மேன்ஷன் ஒன்று மூடப்பட்டுள்ளது. 

`பேச்சிலர்களின் சொர்க்கம் மூடப்பட்டது!’ - தண்ணீரின்றித் தவிக்கும் திருவல்லிக்கேணி

தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சென்னை புறநகர் பகுதிகளிலிருக்கும் ஐ.டி நிறுவனங்கள், தண்ணீர் பற்றாக்குறையால், `நீங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் அல்லது பெங்களூர் போன்ற இடங்களுக்கு மாறிச்செல்லுங்கள்’ என்று வலியுறுத்துவதாகத் தகவல் வெளியானது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதற்குக் காரணம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்துவிட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

`பேச்சிலர்களின் சொர்க்கம் மூடப்பட்டது!’ - தண்ணீரின்றித் தவிக்கும் திருவல்லிக்கேணி

குடிநீர் வழங்கும் ஏரிகளும் வறண்டதால், சென்னையின் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளன. இதன் எதிரொலியாக, மேன்ஷன் ஒன்று மூடப்பட்டுள்ளது. பேச்சிலர்களின் அடைக்கலம் என்று கூறப்படும் திருவல்லிக்கேணி, மேன்ஷன்கள் நிறைந்த இடம். இங்குள்ள ஹெச்.ஹெச்.மேன்ஷன் 15-ம் தேதியிலிருந்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

`பேச்சிலர்களின் சொர்க்கம் மூடப்பட்டது!’ - தண்ணீரின்றித் தவிக்கும் திருவல்லிக்கேணி

இந்த அறிவிப்பால், அங்கு தங்கியிருந்த 150-க்கும் அதிகமானோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர். தற்போது, மேன்ஷன் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், மேன்ஷன் மேனேஜர் சமத் பேசுகையில், ``இங்கு மொத்தம் 40 அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில், 3 பேர் தங்கியிருக்கின்றனர். தலைக்கு 1,600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2 மாதமாகவே தண்ணீர் பிரச்னை நெருக்கடியைக் கொடுத்துவருகிறது.

இதைச் சமாளிக்க முயன்றோம். ஆனால், கடந்த ஒரு மாதமாகவே தண்ணீர் பஞ்சத்தை எங்களால் கட்டுபடுத்த முடியவில்லை. நான் இங்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இப்படி நடப்பது இதுதான் முதல்முறை. தண்ணீர் லாரிக்காரர்களிடம் போன் செய்து கேட்டாலும், அவர்களும் வர தாமதிக்கின்றனர். இங்கிருப்பவர்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. இப்போது, மேன்ஷனை மூடிவிட்டோம். பெரும் நஷ்டம்தான். வேறு தொழில்தான் செய்ய வேண்டும்” என்றார். 

Vikatan