Published:Updated:

`மனசாட்சியே இல்லாம பேசியிருக்கிறார்!' - அமைச்சர் வேலுமணியைச் சாடும் வாசுகி

இ.கார்த்திகேயன்
`மனசாட்சியே இல்லாம பேசியிருக்கிறார்!' - அமைச்சர் வேலுமணியைச் சாடும் வாசுகி
`மனசாட்சியே இல்லாம பேசியிருக்கிறார்!' - அமைச்சர் வேலுமணியைச் சாடும் வாசுகி

``தமிழகத்தில் தண்ணீர்ப் பிரச்னை தலைவிரித்தாடி வரும் நிலையில் சென்னையில் குடிநீர்ப் பிரச்னையே இல்லை என மனசாட்சியே இல்லாமல் அமைச்சர் வேலுமணி கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.

`மனசாட்சியே இல்லாம பேசியிருக்கிறார்!' - அமைச்சர் வேலுமணியைச் சாடும் வாசுகி

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``பி.ஜே.பி, அ.தி.மு.க கூட்டணிப் பின்புலத்தில் கருத்துகள் பறிப்பு என்பது அதிகரித்து வருகிறது.  சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்தைப் பற்றி பேசினாலே விவசாயிகள் கைது என்ற நிலை இருந்து வந்தது. தேர்தலுக்குப் பிறகு தற்போது, காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்கு வேதாந்தாவுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அப்பகுதியின் வேளாண் மண்டலமே அழிந்துவிடும் என அப்பகுதி விவசாயிகள் பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

அதேபோல தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் ஓராண்டு கடந்த நிலையிலும், அரசாணை வெளியிடப்பட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்ட நிலையிலும், ஆலை தொடர்ந்து இயங்குமா, இயங்காதா என்ற மக்களின் சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அரசு சட்டமன்றத்தில் இன்னும் சிறப்புச் சட்டம் நடவடிக்கை எடுக்கவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது அரசின் முடிவுக்கு மாறாக யாரும் பேசக் கூடாது என்ற அதிகாரத்தில் ஆளும் அரசு போலீஸாரை வைத்து ஒடுக்கு முறைகளை கையாள்கிறது. தமிழகத்தில் காவல்துறையின் அடக்குமுறை ராஜ்யமே தொடர்ந்து வருகிறது.

`மனசாட்சியே இல்லாம பேசியிருக்கிறார்!' - அமைச்சர் வேலுமணியைச் சாடும் வாசுகி

ஸ்டெர்லைட் ஆலை துப்பாகிச்சூடு குறித்து வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட அன்றே முகிலன் காணாமல் போயுள்ளார். 100 நாள்களுக்கு மேல் ஆகியும் முகிலனைக் கண்டுபிடிக்க போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அவர்களின் மெத்தனப் போக்கையேக் காட்டுகிறது. கருத்துரிமையைப் பாதுகாக்கும் வகையில் தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி சார்பில் கருத்துரிமைப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக இதுகுறித்த கருத்தரங்கு ஒன்றை நடத்திட திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தண்ணீர்ப் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. சென்னையில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களிலும் 1 சதவிகிதத்துக்கும் குறைவான அளவிலேயே தண்ணீர் இருப்பு உள்ளது.

இந்நிலையில், சென்னையில் குடிநீர்ப் பிரச்னையே இல்லை என மனசாட்சியே இல்லாமல் அமைச்சர் வேலுமணி கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. பா.ஜ.க அரசின் நிதி ஆயோக் கூட்டத்தின் ஆய்வறிக்கையின்படி, இந்தியா பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் இந்தியாவில் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதே நிலை நீடித்தால் 2030வது ஆண்டுக்குள் 10 கோடி பேர் வரை பாதிக்கும் நிலையே ஏற்படுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த எச்சரிக்கையை புரிந்துகொண்டு குடிநீர்த் தட்டுப்பாட்டை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Vikatan