Published:Updated:

`வயதோ 95, வெடி வச்சும் உடைக்க முடியல'- அமராவதி பாலத்தின் சுவாரஸ்ய தகவல்கள்

துரை.வேம்பையன்

கரூர் நகரத்துக்கு தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்து கரூர் நகரத்துக்குள் நுழைய, அமராவதி ஆற்றைக் கடக்க வேண்டும். அந்த ஆற்றில் கட்டப்பட்ட பழைய பாலம் இன்றோடு 95 வயதை எட்டியிருக்கிறது.

`வயதோ 95, வெடி வச்சும் உடைக்க முடியல'- அமராவதி பாலத்தின் சுவாரஸ்ய தகவல்கள்

திருச்சி மற்றும் ஈசடத்தம் வழியாக திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து கரூருக்கு நுழையும் வாகனங்கள், கண்டிப்பாக அமராவதி ஆற்றைக் கடந்துதான் பேருந்துநிலையத்துக்குச் செல்லமுடியும். இந்த அமராவதி ஆற்றைக் கடக்க பதினைந்து வருடங்களுக்கு முன்பு புதிய பாலம் கட்டப்பட்டாலும், அதற்கு முன்பிருந்தே அமராவதி ஆற்றைக் கடக்க அதன் அருகே உள்ள பழைய பாலம்தான் பயன்பட்டு வந்தது. அந்தப் பழைய பாலம் இன்றோடு 95 வயதை எட்டியிருக்கிறது.

`வயதோ 95, வெடி வச்சும் உடைக்க முடியல'- அமராவதி பாலத்தின் சுவாரஸ்ய தகவல்கள்

அந்தப் பாலத்தைப் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட கரூர்வாசிகள் சிலர், ``பொதுப்பணித்துறை மூலம் கடந்த 1919-ம் ஆண்டு, ஜூன் 30-ம் தேதி திவான் பகதூர் ராஜகோபால ஆச்சாரியாரால் அடிக்கல் நாட்டப்பட்டு, அமராவதி (பழைய) பாலம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து, கடந்த 1924-ம் ஆண்டு, ஜூன் 19-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போதைய திருச்சிராப்பள்ளி ஜில்லா போர்டு தலைவர் தேசிக்காச்சாரி பெயர் சூட்டப்பட்ட இந்தப் பாலத்தை, அப்போதைய சென்னை கவர்னர் விஸ்கவுன்ட் கோஸ்சென் ஹாக்ஹர்ஸ்ட்டால் திறந்து வைக்கப்பட்டது. 1977-ம் ஆண்டு அமராவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு வந்தபோது, அதனால் இந்தப் பாலத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அந்தளவுக்கு உறுதியாக இருந்தது. ஆனாலும், பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இதன் அருகிலேயே புதிய பாலத்தை அமைத்தார்கள். பழைய பாலத்தை வெடி வைத்து தகர்க்க முயன்றார்கள். ஆனால், அந்த வெடியால் பாலத்தின் சிறு காரையைக்கூட சிதைக்கமுடியவில்லை. 

`வயதோ 95, வெடி வச்சும் உடைக்க முடியல'- அமராவதி பாலத்தின் சுவாரஸ்ய தகவல்கள்

அதனால், ஆச்சர்யமாகிப்போன அதிகாரிகள், பழைய பாலத்தை மக்கள் நடந்து செல்லவும், டூவீலர், மூன்றுசக்கர வாகனங்களில் செல்லவும் அனுமதியளித்தார்கள். கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அமராவதி புதிய பாலம் இடிந்தபோதும், 2008-ம் ஆண்டு புதிய பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றபோதும், இந்தப் பழைய பாலம்தான் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.

`வயதோ 95, வெடி வச்சும் உடைக்க முடியல'- அமராவதி பாலத்தின் சுவாரஸ்ய தகவல்கள்

இப்போது அமராவதி ஆற்றில் புறவழிச்சாலையில்  இரண்டு பாலங்கள், பழைய பாலத்தின் அருகில் கட்டப்பட்ட புதிய பாலம், பசுபதிபாளையத்தில் உள்ள தரைப்பாலம், புதிதாக கட்டப்பட்ட புதிய பாலம் என பல பாலங்கள் வந்துவிட்டபோதும், அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட முதல் பாலமான இந்தப் பழைய பாலம் 95 வருஷமா கரூரின் அடையாளமா மாறி கம்பீரமா நிற்கிறது. இந்தப் பாலம் நூற்றாண்டைக் கடந்தும் ஸ்திரமாக நிலைத்து, கரூருக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்றார்கள்.

Vikatan