Published:Updated:

`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்!'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் தோண்டப்பட்டது நீரூற்று

இ.கார்த்திகேயன்
`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்!'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் தோண்டப்பட்டது நீரூற்று
`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்!'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் தோண்டப்பட்டது நீரூற்று

தூத்துக்குடி வைப்பாற்றுப் பகுதியில் மூடப்பட்ட ஊற்றுக்குழிகள் மீண்டும் தோண்டப்பட்டு மக்கள் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்!'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் தோண்டப்பட்டது நீரூற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பகுதி விளாத்திகுளம். தண்ணீர்ப் பிரச்னைதான் இங்கு முக்கியப் பிரச்னையாக இருந்து வந்தது. இப்பேரூராட்சியில் 30,000-துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். சீவலப்பேரி தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்படி 7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாட்டால், மக்களே தங்களது தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் இப்பகுதியில் உள்ள வைப்பாற்றுப் பகுதியில் குழி தோண்டி, அதில் ஊறும் ஊற்றுத் தண்ணீரை அகப்பையால் எடுத்து குடங்களில் நிரப்பி எடுத்துச் சென்று பயன்படுத்தி வருகிறார்கள்.  

`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்!'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் தோண்டப்பட்டது நீரூற்று

ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கும் சம்பவத்தை பல ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, பேரூராட்சி அதிகாரிகள் கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஊற்றுக் குழிகளை மூடிவிட்டனர். இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து தூத்துக்குடி தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் விளாத்திகுளத்தில் வரும் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்களும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இந்நிலையில், மூடப்பட்ட ஊற்றுக்குழிகள் மீண்டும் தோண்டப்பட்டு பொதுமக்கள் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்!'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் தோண்டப்பட்டது நீரூற்று

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன் நம்மிடம் பேசுகையில், ``சீவலப்பேரி தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில்தான் இந்த தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்குத் தண்ணீர் கிடைத்து வந்தது. அதுவும் 10 நாள்களுக்கு மேல் வருவதால்தான், தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க, வைப்பாற்றுப் பகுதிகளில் ஊற்றுக்குழி தோண்டி அதில் ஊறும் தண்ணீரை அகப்பை மூலம் எடுத்து அதைக் குடிநீருக்கும் சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறோம். 10 ஊற்றுகள் தோண்டினா அதுல ஒரு சில ஊற்றுகளில்தான் தண்ணீர் ஊறும். அகப்பையைப் பயன்படுத்தி தண்ணீரைக் கலக்காம தெளிச்சலா எடுத்து குடத்தை நிரப்பணும். ஒரு குடம் நிரம்ப 1 மணி நேரம் வரை ஆகும். காலங்காலமா இதே ஆற்றுப்பகுதியில தண்ணீர் எடுத்துதான் பயன்படுத்திட்டு வந்தோம். இயற்கையாகவே ஊறுவதால் இந்தத் தண்ணீர்தான் எங்களுக்கு அமிர்தம்.

`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்!'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் தோண்டப்பட்டது நீரூற்று

தற்போதைய நிலைமையில் இதே தண்ணீர் எங்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக இருக்கு. இதை ஒரு செம்பு குடிச்சாலே தாகம் அடங்கிடும். சோறு, குழம்பு ருசியா இருக்கும். இந்தச் சுவைக்காகத்தான் பெண்கள் 3 கி.மீ தூரம் வரை நடந்து வந்து தலைச்சுமையாவே தண்ணீர் எடுத்துட்டுப் போறாங்க. மீண்டும் ஊற்றிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி கொடுத்த பேருராட்சி நிர்வாகம், இது போல பல இடங்களில் ஊற்று தோண்டி தரணும். அதுமட்டுமல்லாம, ஆற்றில் போர் போட்டு தண்ணீரை டேங்குகளில் நிரப்பி விநியோகம் செய்யணும்” என்றார். மீண்டும் தோண்டப்பட்ட ஊற்றுக்குழிகளைப் பார்வையிட்ட அத்தொகுதியின் எம்.எல்.ஏ சின்னப்பனிடமும் இதே கோரிக்கையை முன் வைத்தனர். மூடப்பட்ட ஊற்றுக்குழிகள் மீண்டும் தோண்டப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்.

Vikatan