Published:Updated:

`இதைச் செய்யாவிட்டால்... சென்னை மக்களே உஷார்' - எச்சரிக்கும் ரிப்போர்ட்!

மலையரசு
`இதைச் செய்யாவிட்டால்... சென்னை மக்களே உஷார்' - எச்சரிக்கும் ரிப்போர்ட்!
`இதைச் செய்யாவிட்டால்... சென்னை மக்களே உஷார்' - எச்சரிக்கும் ரிப்போர்ட்!

சென்னையின் நீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரி, செங்குன்றம் ஏரி என அனைத்தும் வறண்டுவிட்டன.

`இதைச் செய்யாவிட்டால்... சென்னை மக்களே உஷார்' - எச்சரிக்கும் ரிப்போர்ட்!

நிதி ஆயோக் சமீபத்தில் அறிவித்த ஆய்வறிக்கையில் சென்னை உட்பட 21 இந்திய நகரங்களில் 2020-க்குள் நிலத்தடி நீர் இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளது. நகரத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் நிலத்தடி நீரையே ஆதாரமாகக் கொண்டுள்ளனர். அனைவரும் குழாய், போர்வெல் என நிலத்தடி நீரையே பயன்படுத்துகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவருகிறது. எவ்வளவு மழை பெய்தாலும் மக்களின் பயன்பாட்டின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இப்போதில் இருந்து நிலத்தடி நீரை அதிகப்படுத்தாவிட்டால் இந்திய மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேர் குடிநீர் இல்லாமல் அவதிப்படுவர். இந்த நிலை 2030-க்குள் வரும் என்கிறது இதே ஆய்வு. 2020-ம் ஆண்டு வெகு தொலைவில் இல்லை என்ற உண்மையைப் புரிந்துகொண்டால் நிலைமை ஆபத்தானது என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்கிறார் தேசிய நீர் அகாடமி இயக்குநர் மனோகர் குஷாலினி. 

சென்னை உள்ளிட்ட நகரங்களின் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பேசும் அவர், ``சென்னையின் குடிநீர் தேவையைப் பொறுத்தவரை, அரசாங்கம் முழுவதும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையே நம்பி இருக்கிறது. பூமி ஒரு வரையறுக்கப்பட்ட கிரகம் என்பதையும், கடல்களும் வறண்டுவிடும் என்பதையும் அவர்கள் மறந்து விடுகிறார்கள். நம் குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் இந்த உலகில் எதை விட்டுச் செல்லப் போகிறோம். நாம் நிறைய பணம் வைத்திருக்கலாம். ஆனால், தண்ணீருக்குப் பதில் பணத்தை சாப்பிடச் சொல்ல முடியாது. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் சரியான தீர்வு கிடையாது. அதேநேரம் நிலத்தடி நீர் சேமிப்புத் திட்டம் இதற்குச் சரியான தீர்வாக இருக்கும். அரசாங்கத்தின் முயற்சியாக மட்டும் இல்லாமல் மக்களும் நிலத்தடி நீரைச் சேமிக்க முன்வர வேண்டும். அப்போது தான் இதற்கு நல்ல தீர்வை எட்ட முடியும்" எனக் கூறியுள்ளார். 

article credit: newindianexpress

Vikatan