Published:Updated:

`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்!

மலையரசு
`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்!
`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்!

சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் மக்கள் காலிக் குடங்களைத் தூக்கிக்கொண்டு தண்ணீர் தேடி அலைவதை தற்போது அதிகமாகப் பார்க்க முடிகிறது. இதுமட்டுமல்லாமல் அதிக வெயிலால் மாநகர் முழுவதும் அதிக வெப்பம் இருந்தது. அனல் காற்றும் அதிகமாக வீசியதால் மக்கள் வெளியே வர முடியாத நிலையும் இருந்தது. இதைத் தணிக்கும் விதமாக இன்று சென்னையின் பல இடங்களில் மழை பெய்தது. 

`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்!

தற்போது சென்னையில் மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அத்துடன் கோவிலம்பாக்கம், ஓ.எம்.ஆர் சாலை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துவருகிறது. சுமார் 196 நாள்களுக்குப் பிறகு பெய்த மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநகரில் பல இடங்களில் மேகமூட்டம் காணப்படுவதால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்ததை அடுத்து இணையதளவாசிகள் #chennairains என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். 

`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்!

பலரும் தங்கள் பகுதியில் பெய்து வரும் மழையைப் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டரில், சென்னை 196-ல் அவுட் ஆகிவிட்டது. ஒரு மாற்றத்திற்காக மழை விளையாடத் தொடங்கியுள்ளது எனப் பதிவிட்டுள்ளது. இதுபோல் நெட்டிசன்கள் பதிவிட #chennairains என்ற ஹேஷ்டேக் இந்தியா டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்!

வெப்ப சலனம் காரணமாகச் சென்னையில் மழை பெய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை இன்னும் நான்கு நாள்களுக்குத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Vikatan