Published:Updated:

இஸ்ரோ, நாசா கவனத்துக்கு.... விண்கல்லைக் கொண்டு வந்த கோவை பிரமுகர்

எம்.புண்ணியமூர்த்தி
குருபிரசாத்
இஸ்ரோ, நாசா கவனத்துக்கு.... விண்கல்லைக் கொண்டு வந்த கோவை பிரமுகர்
இஸ்ரோ, நாசா கவனத்துக்கு.... விண்கல்லைக் கொண்டு வந்த கோவை பிரமுகர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, ஒருவர் விண்கல் என்று கூறி ஒரு கல்லை எடுத்து வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

இஸ்ரோ, நாசா கவனத்துக்கு.... விண்கல்லைக் கொண்டு வந்த கோவை பிரமுகர்

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன். இவர் தனது வீட்டில் கடந்த 50 ஆண்டுகளாக, 5 கிலோ 900 கிராம் எடையுள்ள விண்கல் இருப்பதாகக் கூறி, புவியியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆனால்,  அவர் கல்லுடன் வந்ததால், அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை. புவியியல் துறையில் ஒப்படைப்பதற்கான, ஆவணங்களை காண்பித்த பிறகே லட்சுமி நாராயணனை போலீஸார் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதித்தனர். 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த லட்சுமி நாராயணன், ``நாங்கள் கல்லூரி படிக்கும் நேரத்தில் என் அண்ணன் சிவசுப்பிரமணியன் இதைப்பற்றிக் கூறினார். பிறகு அதை யாரும் கவனிக்கவில்லை. எனவே, கோவை மாவட்டம் புவியியல் மற்றும் கணிமவளத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, கலெக்டர் முன்னிலையில் ஒப்படைக்க வந்துள்ளேன். இதை இஸ்ரோ, நாசா மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உயர்கல்வி மாணவர்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன். அதில், ஏதாவது பலன் கிடைத்தால் நான் மிகவும் சந்தோசப்படுவேன்" என்றார்.