Published:Updated:

``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை!” - முதன்மைச் செயலர்

இரா.கோசிமின்

தண்ணீர்

``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை!” - முதன்மைச் செயலர்
``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை!” - முதன்மைச் செயலர்

விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக அருப்புக்கோட்டை, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர்கள் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். ஆனால், ஊராட்சிப் பகுதிகளில் தேவைக்கும் அதிகமாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், ஒரு சில பகுதிகளில் மட்டுமே தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுவதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் தெரிவித்தார்.

``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை!” - முதன்மைச் செயலர்

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர்ப் பஞ்சம் நிலவி வருவதால், ஆங்காங்கே மக்கள் காலிக் குடங்களுடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலர் கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டம் நடைபெறுவதற்கு முன் அருப்புக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை!” - முதன்மைச் செயலர்

ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் முதன்மைச் செயலர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம், ``விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிப் பகுதிகளுக்கு நாளொன்று 72 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், தேவைக்கும் அதிகமாக 76 மில்லியன் லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. விருதுநகர் நகராட்சிப் பகுதியில் 61.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைக்கு 47 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அருப்புக்கோட்டை பகுதிக்குத் தேவையான 49 லட்சம் லிட்டருக்குப் பதிலாக 35 லட்சம் லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது. அருப்புக்கோட்டையில் நிலவும் பிரச்னையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை!” - முதன்மைச் செயலர்

விருதுநகர் மாவட்டத்தில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை. ஆனால், தண்ணீர் விநியோகம் செய்வதில் சில இடையூறுகள் உள்ளதால் சில இடங்களில் பொதுமக்களுக்கு முறையாகக் குடிநீர் வழங்க முடியவில்லை. ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லை. தினசரி தேவைப்படும் அளவு குடிநீர் வழங்கப்படுகிறது. அருப்புக்கோட்டை, திருத்தங்கல், சிவகாசி ஆகிய சில பகுதிகளில் மட்டுமே குடிநீர் வழங்குவதில் சில பிரச்னைகள் உள்ளன. அங்கன்வாடி, பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லை. மாவட்டத்தில் உள்ள ஒருசில பகுதிகளைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் குடிநீர்ப் பிரச்னை இல்லை'' எனத் தெரிவித்தார்.

``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை!” - முதன்மைச் செயலர்

ஆனால், மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு ஆகிய இருவரும் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சொந்தச் செலவிலேயே லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

Vikatan