Published:Updated:

`மருத்துவர் ரமேஷ் மனைவி மீது வாகனத்தில் மோதியவர்கள் எங்கே?' - கொளத்தூர் மணி கேள்வி

எம்.புண்ணியமூர்த்தி
`மருத்துவர் ரமேஷ் மனைவி மீது வாகனத்தில் மோதியவர்கள் எங்கே?' - கொளத்தூர் மணி கேள்வி
`மருத்துவர் ரமேஷ் மனைவி மீது வாகனத்தில் மோதியவர்கள் எங்கே?' - கொளத்தூர் மணி கேள்வி

வாகன விபத்தில் கோவை மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா உயிரிழந்த விவகாரத்தில், விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாகப் போலீஸார் செயல்படுவதாக திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி குற்றம்சாட்டியுள்ளார்.

`மருத்துவர் ரமேஷ் மனைவி மீது வாகனத்தில் மோதியவர்கள் எங்கே?' - கொளத்தூர் மணி கேள்வி

கடந்த 24-ம் தேதி, கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே உள்ள ஜம்புகண்டி பகுதியில் மதுபோதையில் கண்மூடித்தனமாக இரண்டுபேர் வந்த இருசக்கர வாகனம் மோதியதில், பள்ளியிலிருந்து தன் மனைவியை அழைத்து வந்துகொண்டிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலரு மருத்துவருமான ரமேஷின் மனைவி ஷோபனா உயிரிழந்தார். மகள் சாந்தலா தேவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக்கால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாகவும் ஷோபனாவின் மரணத்துக்கும் அந்த டாஸ்மாக்கில் மது குடித்துவிட்டு வந்த இளைஞர்கள் போதையில் ஏற்படுத்திய விபத்துதான் என்றும் அந்தப் பகுதி மக்கள் கூற தன் மனைவியின் சடலத்தோடு அந்த டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினார். இதையடுத்து அந்தப் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

`மருத்துவர் ரமேஷ் மனைவி மீது வாகனத்தில் மோதியவர்கள் எங்கே?' - கொளத்தூர் மணி கேள்வி

இந்நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் கோவையில் உள்ள சமூக செயல்பாட்டாளர்கள் சிலரும் சேர்ந்து கோவை எஸ்.பி-யிடம் இது தொடர்பாக மனு ஒன்றை அளித்துள்ளார்கள். அதில், ``விபத்தை ஏற்படுத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறதே ஒழிய, குற்றவாளிகள் மதுபோதையில் இருந்தனர் என்பதை உறுதி செய்வதற்கான மருத்துவ சோதனையை போலீஸ் செய்யவில்லை. அதுமட்டுமல்லாது மருத்துவர் ரமேஷ் மனைவியின் மீது மோதிய இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களுக்கும் அடிபட்டுள்ளது என்று தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது போலீஸாருக்கே தெரியவில்லை. போலீஸார் அந்தக் குற்றவாளிகளை இதுவரை நேரில் பார்க்கவில்லை. இவையெல்லாம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. குற்றவாளிகளுக்கு சாதகமாக போலீஸ் செயல்படுகிறது. விபத்து ஏற்படுத்தியவர்கள் மதுபோதையில் இருந்தார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.