Published:Updated:

சிகிச்சையில் இருந்த 4 வயதுக் குழந்தையைக் கடித்த தெருநாய்கள்! - அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

ர.ரகுபதி
சிகிச்சையில் இருந்த 4 வயதுக் குழந்தையைக் கடித்த தெருநாய்கள்! - அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
சிகிச்சையில் இருந்த 4 வயதுக் குழந்தையைக் கடித்த தெருநாய்கள்! - அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

நாமக்கல் அருகே பரமத்தி வேலூரில் அரசு மருத்துவமனைக்குள் தெருநாய்கள் புகுந்து குழந்தையைக் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சையில் இருந்த 4 வயதுக் குழந்தையைக் கடித்த தெருநாய்கள்! - அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரிஹரன் - யோகேஸ்வரி தம்பதியின் 4 வயது குழந்தை புனிதவல்லி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். 

சிகிச்சையில் இருந்த 4 வயதுக் குழந்தையைக் கடித்த தெருநாய்கள்! - அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

இந்த நிலையில், இன்று  மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள், மருத்துவமனைக்குள் நுழைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தையை திடீரென கடித்துக் குதறியது. இதனால் அருகில் இருந்தவர்கள் உடனே நாய்களை விரட்டி குழந்தையைக் காப்பாற்றினர். இதுபற்றி கூறிய குழந்தை புனிதவல்லியின் பெற்றோர், ``மருத்துவமனையில் குழந்தையைக் கடிக்கும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருக்கின்றனர். இங்கு வேலை செய்பவர்கள் கிட்டத்தட்ட மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தும், 2 மணி நேரமாக சிகிச்சை அளிக்க வரவில்லை' என்று புகார் கூறினர்.

சிகிச்சையில் இருந்த 4 வயதுக் குழந்தையைக் கடித்த தெருநாய்கள்! - அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

உடனே சம்பவத்தைக் கேள்விப்பட்டு அப்பகுதிக்கு வந்த மருத்துவ அலுவலர் சாந்தி, அங்குள்ள மருத்துவர்களைக் கண்டித்தார். குழந்தைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தற்போது நலமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பரமத்தி வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.