Published:Updated:

`இனி வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது’ - பா.இரஞ்சித்துக்கு முன்ஜாமீன்

அருண் சின்னதுரை
`இனி வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது’ - பா.இரஞ்சித்துக்கு முன்ஜாமீன்
`இனி வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது’ - பா.இரஞ்சித்துக்கு முன்ஜாமீன்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில், சர்ச்சைக்குரிய  வகையில் பேசியது தொடர்பான வழக்கில், இயக்குநர் பா. இரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

`இனி வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது’ - பா.இரஞ்சித்துக்கு முன்ஜாமீன்

ராஜராஜ சோழன் குறித்து பா.இரஞ்சித் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக,  தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர்,  இரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், முன் ஜாமீன் கோரி  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பா.இரஞ்சித் மனுத்தாக்கல் செய்தார்.  இந்நிலையில், இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதி ராஜமாணிக்கம் விசாரணை செய்தார். மனுதாரர் தரப்பில், "தான் பேசியது மட்டும் தவறான நோக்கில் சித்திரிக்கப்படுகிறது. தான் அறிந்த வரலாறுகளையே பேசினேன். இது, எந்த சமூகப் பிரச்னையையும் ஏற்படுத்தாது” என்று தெரிவிக்கப்பட்டது. 

`இனி வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது’ - பா.இரஞ்சித்துக்கு முன்ஜாமீன்

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்வேறு புத்தகங்களில் பா.ரஞ்சித் பேசியது தொடர்பான குறிப்புகள் இருப்பதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பேச்சுரிமை உள்ளது. ஆகவே, இந்த வழக்கில் முன்  ஜாமீன் வழங்க வேண்டுமென கோரினார். அப்போது,  பா.ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனும் நோக்கில் வழக்கில் சேர்ந்த முத்துக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் பா. இரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கினால், இதுபோல பலரும் பேசத் தொடங்குவர். ஆகவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இனி வரும் காலங்களில், சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது.  அவரை
காவலில் வைத்து விசாரிக்கவேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி, முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இனி வரும் காலங்களில் இது போன்று பேசினால், முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி, தொடர்புடைய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Vikatan