Published:Updated:

`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது!' - ஸ்டெர்லைட் நிர்வாகம்

விகடன் விமர்சனக்குழு
`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது!' - ஸ்டெர்லைட் நிர்வாகம்
`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது!' - ஸ்டெர்லைட் நிர்வாகம்
`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது!' - ஸ்டெர்லைட் நிர்வாகம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் தூத்துக்குடியில் மாசு குறைந்துள்ளதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்,  மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மனுவுக்கு, ஆலை நிர்வாகம் சார்பில் விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது!' - ஸ்டெர்லைட் நிர்வாகம்

அதில், ``ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. கடந்த 2011-ம் ஆண்டு நீரி எனும் தேசிய சுற்றுச்சுழல் & பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லை என அறிக்கை அளித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், சர்வதேச உருக்காலைகளுக்கு இணையாக தூத்துக்குடி நகரின் சுற்றுச்சுழல் மேம்பாட்டுக்கு 500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.

2015-16, 2016-17 மற்றும் 2017-18-ம் ஆண்டுகளில், ஆலையை இயக்குவதற்கான ஒப்புதலைப் புதுப்பித்த அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் நெருக்கடிக்குப் பணிந்து 2018-19 ம் ஆண்டிற்கான ஒப்புதலை வழங்க மறுத்து, ஆலையை மூட உத்தரவிட்டுள்ளோம். ஆலையை மீண்டும் இயக்க 1.55 லட்சம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எந்த ஆவண, ஆதாரங்களும் இல்லாமல் கொள்கை முடிவெனக் கூறி ஆலையை மூட அரசு உத்தரவிட்டது வருந்தத்தக்கது. ஆலையை மூட, கொள்கை முடிவு எடுத்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை..

`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது!' - ஸ்டெர்லைட் நிர்வாகம்

கடந்த ஆண்டு மே-22 -ம் தேதி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு, மக்களை சமாதானப்படுத்துவதற்காக ஆலையை நிரந்தரமாக மூடி அரசு உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியில் இருந்து 35 கிராமங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு, காற்று மற்றும் தண்ணீர் மாசு குறைந்துள்ளதாகக் கூற எந்த ஆதாரம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  உள் நோக்கம் கற்பிக்கும் வகையில், `சிப்காட்டில் உள்ள மற்ற தொழிற்சாலைகள் தூத்துக்குடி மாசுக்குக் காரணமல்ல' என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது தவறானது” என அந்த விளக்க மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Vikatan