Published:Updated:

`முகிலன், சமாதியில் உள்ளதாகக் கூறுவதா?' - உயர் நீதிமன்றத்தில் அச்சம் தெரிவித்த வழக்கறிஞர்

விகடன் விமர்சனக்குழு
`முகிலன், சமாதியில் உள்ளதாகக் கூறுவதா?' - உயர் நீதிமன்றத்தில் அச்சம் தெரிவித்த வழக்கறிஞர்
`முகிலன், சமாதியில் உள்ளதாகக் கூறுவதா?' - உயர் நீதிமன்றத்தில் அச்சம் தெரிவித்த வழக்கறிஞர்

மாயமான சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்குத் தள்ளிவைத்தது. 

`முகிலன், சமாதியில் உள்ளதாகக் கூறுவதா?' - உயர் நீதிமன்றத்தில் அச்சம் தெரிவித்த வழக்கறிஞர்

சமூக ஆர்வலர் முகிலன் எங்கே?  என்ற கேள்விக்கு இதுவரை விடைகிடைத்தபாடில்லை.  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆவணப் படத்தை வெளியிட்ட சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை, கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை. அவரை கண்டுபிடித்துத் தரக் கோரி, ஹென்றி திபேன் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகிலன் மாயமானது தொடர்பான வழக்கில்  முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் சீலிடப்பட்ட கவரில்  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபி சி ஐ டி தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் புதிய அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது.

`முகிலன், சமாதியில் உள்ளதாகக் கூறுவதா?' - உயர் நீதிமன்றத்தில் அச்சம் தெரிவித்த வழக்கறிஞர்

முகநூல் பக்கத்தில், முகிலன் எங்கே என வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பு போட்ட பதிவுக்கு, ராஜபாளையம் காவல் ஆய்வாளர் முகமது கவுஸ், 'சமாதி' எனப் பதிலளித்துள்ளதாகவும், இது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் வழக்கறிஞர் அச்சம் தெரிவித்தார். அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதிகள், ``விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. சிபிசிஐடி காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். 

விசாரணை புதிய புதிய கோணத்தில் நடந்துவருகிறது. ஒவ்வொரு முறையும் புதுப்புது தகவல்கள் கிடைத்துவருகின்றன” என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் விசாரணை பாதிக்கும் என்பதால், இந்த அறிக்கையில் உள்ள விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

Vikatan