Published:Updated:

`போராட்டத்தின் பின்னணியில் சீன நிறுவனம்!’- கொதிக்கும் வேதாந்தா

விகடன் விமர்சனக்குழு
`போராட்டத்தின் பின்னணியில் சீன நிறுவனம்!’- கொதிக்கும் வேதாந்தா
`போராட்டத்தின் பின்னணியில் சீன நிறுவனம்!’- கொதிக்கும் வேதாந்தா

'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை போராட்டத்துக்குத் தூண்டியதும், அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதும், சீன நிறுவனம்தான்' என வேதாந்தா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. 

`போராட்டத்தின் பின்னணியில் சீன நிறுவனம்!’- கொதிக்கும் வேதாந்தா

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலை மூடப்பட்டதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானிசுப்பராயன் அமர்வு முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. வேதாந்தா நிறுவனம் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரியமாசுந்தரம் ஆஜரானார். அப்போது அவர், ``ஆலை விரிவாக்கத்திற்கு ஏற்கெனவே அரசிடம் அனுமதி வாங்கியுள்ளோம். இருந்தாலும், மக்கள் போராட்டத்தினாலும், 13 பேர் மீதான துப்பாக்கிச்சூடு காரணமாகவே ஆலை மூடப்பட்டது. மே 22 போராட்டத்தில், 'எப்படி 20 ஆயிரம் பேர் வந்தார்கள் எனத் தெரியவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது' என்றார். 

`போராட்டத்தின் பின்னணியில் சீன நிறுவனம்!’- கொதிக்கும் வேதாந்தா

ஒரு சிலரின் அரசியல் நோக்கம் மற்றும் சில என்ஜிஓ-க்களினால் இந்தப் போராட்டம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. மூடல் உத்தரவு போடும்போது,13 பேர் உயிரிழந்தனர் என்ற காரணத்தை தமிழக அரசு கூறிவிட்டு, இப்போது நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணம் என்கின்றனர். துப்பாக்கிச்சூடு தொடர்பான சிபிஐ விசாரணையில் நாங்கள் கிடையாது. ஆனால், எங்கள் நிறுவனத்தை தண்டித்துள்ளனர். ஆலை மூடப்பட்டாலும், பராமரிக்க அனுமதி மறுப்பதாலும் அரசும் சரியாகப் பராமரிக்காததாலும் அமிலங்கள் வெளியேறி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது. போராட்டக்காரர்களுக்கு அந்நிறுவனம்தான் நிதி உதவி  வழங்குகிறது” என தன் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளார். இந்த விசாரணை நாளையும் தொடர்ந்து நடைபெற உள்ளது. 

Vikatan