Published:Updated:

செத்துக்கிடந்த ஆடுகள்; தற்கொலைக்கு முயன்ற உரிமையாளர்! - சோகத்தில் மலைவாழ் மக்கள்

அருண் சின்னதுரை
செத்துக்கிடந்த ஆடுகள்; தற்கொலைக்கு முயன்ற உரிமையாளர்! - சோகத்தில் மலைவாழ் மக்கள்
செத்துக்கிடந்த ஆடுகள்; தற்கொலைக்கு முயன்ற உரிமையாளர்! - சோகத்தில் மலைவாழ் மக்கள்

இடி தாக்கியதில் கொத்துக் கொத்தாக ஆடுகள் இறந்ததால் மலை வாழ் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகக் கண்ணீர் வடித்து உதவி கோரினர்.

செத்துக்கிடந்த ஆடுகள்; தற்கொலைக்கு முயன்ற உரிமையாளர்! - சோகத்தில் மலைவாழ் மக்கள்

மதுரை, உசிலம்பட்டி அடுத்த குறிஞ்சி நகரில் மலை வாழ் மக்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர். மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்துவருகின்றனர். பலருக்கும் படிப்பு இல்லை என்பதால் வெளியில் வேலைக்குச் செல்லாமல் மலைகளில் ஆடு, மாடு மேய்ப்பது, தேன் எடுப்பது, மூலிகைகள் சேமிப்பது, விறகு குச்சிகள் எடுப்பது என்று பிழைத்துவருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த மலை வாழ் மக்கள் சிலர் குழுவாகப் பக்கத்து மலைக்குச் சென்று ஆடு மேய்த்துள்ளனர். அப்போது லேசாக மழை பொழிந்துள்ளது. திடீர் என பலமாக இடி இடித்ததில் சுமார் 37 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்படுகிறது.

செத்துக்கிடந்த ஆடுகள்; தற்கொலைக்கு முயன்ற உரிமையாளர்! - சோகத்தில் மலைவாழ் மக்கள்

இதனால் ஆடுகளை வைத்துப் பிழைப்பு நடத்திவந்த செல்வம் உள்ளிட்ட 6 நபர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகக் கண்ணீர் வடித்தனர். சோகத்தைத் தாங்கமுடியாத செல்வம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மீட்கப்பட்டார். இந்நிலையில் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி தங்களைக் காப்பாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Vikatan