Published:Updated:

மதுபானத்தில் கிடந்த `அரணை'- அரியலூர் அதிர்ச்சி

எம்.திலீபன்
மதுபானத்தில் கிடந்த `அரணை'- அரியலூர் அதிர்ச்சி
மதுபானத்தில் கிடந்த `அரணை'- அரியலூர் அதிர்ச்சி

மதுபாட்டிலில் அரணை கிடந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, `இதைக் குடித்துவிட்டு இறந்தால் என் குடும்பத்தை யார் காப்பாற்றுவது' என ஆவேசமாகப் பேசியிருக்கிறார் குடிமகன்.

மதுபானத்தில் கிடந்த `அரணை'- அரியலூர் அதிர்ச்சி

அரியலூர் மாவட்டம் மணலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை எண் 6301 என்ற அரசு டாஸ்மாக் கடையில் 115 ரூபாய்க்கு அக்கார்டு சரக்குப் பாட்டிலை ரசீதோடு வாங்கியுள்ளார். இரவு நேரம் என்பதால் வீட்டில் சென்று குடிக்கலாம் என்று நினைத்து பாட்டிலைத் திறக்க முற்பட்டபோது பாட்டிலின் உள்ளே ஏதோ ஒன்று மிதந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வேலுச்சாமி.

மதுபானத்தில் கிடந்த `அரணை'- அரியலூர் அதிர்ச்சி

அருகிலிருந்தவர்களிடம் காட்டியபோது இறந்து கிடந்தது அரணை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் வகையில் வழக்கறிஞர்களிடம் முறையிட்டுள்ளார். இச்சம்பவம்  குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபானத்தில் கிடந்த `அரணை'- அரியலூர் அதிர்ச்சி

இது குறித்து வேலுச்சாமி பேசுகையில், ``இந்த நாடு எங்க சார் போகிறது. அரசு இயந்திரம் படுமோசமாக இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம். அத்தோடு குடிமகன்களின் வாழ்க்கையில் அரசு மெத்தனமாகச் செயல்படுவது. தொடர்கதையாக உள்ளது. அரசு வழங்கக்கூடிய மது பாட்டிலில் அரணை கிடக்கிறது. இது எப்படி வந்தது. இது அரசு சரக்கு தானா, இல்லை பாரின் உரிமையாளர் டூப்ளிகேட் சரக்கை விற்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

மதுபானத்தில் கிடந்த `அரணை'- அரியலூர் அதிர்ச்சி

இதை முழுமையாக போலீஸார் விசாரிக்க வேண்டும். அத்தோடு இந்தச் சரக்கை நான் குடித்துவிட்டு இறந்துவிட்டால் என் குடும்பத்தை யார் காப்பாற்றுவது. இதற்கு அரசு பொறுப்பேற்குமா, அத்தோடு கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வாங்கிய சரக்குப் பாட்டிலில் நத்தை ஓடு கிடந்தது. அந்த வழக்கு என்னாச்சு என்று இன்று வரையிலும் தெரியவில்லை. இப்போது அரணை கிடைக்கிறது. இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடர வேண்டும்'' என்றார் காட்டமாக. 

இதுகுறித்து கலால் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ``மதுபாட்டிலில் அரணை கிடந்ததாக தகவல் எங்களுக்கும் வந்தது, அதன்பேரில் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம். அத்தோடு போலிச் சரக்கு இப்பகுதியில் விற்பனையாகிறது என்று சொல்கிறீர்கள். இது குறித்தும் விசாரணை நடத்துகிறோம்" என்று முடித்துக்கொண்டார்.

Vikatan