Published:Updated:

‘சொந்த வீட்டால நிம்மதி போச்சு; உசுர எடுத்துடுவேன்னு மிரட்டுறாங்க’- கண்ணீர் வடிக்கும் கொத்தனார்

இரா.கோசிமின்

கொத்தனார்

‘சொந்த வீட்டால நிம்மதி போச்சு; உசுர எடுத்துடுவேன்னு மிரட்டுறாங்க’- கண்ணீர் வடிக்கும் கொத்தனார்
‘சொந்த வீட்டால நிம்மதி போச்சு; உசுர எடுத்துடுவேன்னு மிரட்டுறாங்க’- கண்ணீர் வடிக்கும் கொத்தனார்

சொந்த வீடு வாங்கியதால், தன்னை ஊரைவிட்டே விரட்டுவதற்காக கிராமத்தினர் சிலர் தங்களை மிரட்டிவருவதாக, கொத்தனார் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.     

‘சொந்த வீட்டால நிம்மதி போச்சு; உசுர எடுத்துடுவேன்னு மிரட்டுறாங்க’- கண்ணீர் வடிக்கும் கொத்தனார்

விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (60). இவர், கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினரைப் புறக்கணித்தும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து முத்துலட்சுமியின் மகன் தங்கப்பாண்டி கூறும்போது, ''விருதுநகர் கோட்டைப்பட்டி தெருவில் வசித்துவந்தோம். நான் கொத்தனாராக வேலைசெய்துவருகிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன், சந்திரகிரிபுரம் கிராமத்தில் வீடு வாங்கி என் அம்மா, மனைவி, குழந்தைகளுடன் வசித்துவருகிறோம். ஆனால், எங்களை ஊரைவிட்டு விரட்ட கிராமத்தினர் சிலர் முயன்று வருகிறார்கள். பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க விடுவதில்லை. குழந்தைகளைத் தெருவில் எங்கும் விளையாட அனுமதிப்பதில்லை. பொதுப்பாதையில் நடக்க அனுமதிப்பதில்லை. எங்களை ஊரைவிட்டே விரட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுகின்றனர். வெளியூர்க்காரன் எங்கள் ஊரில் வீடு வாங்கி வசிப்பதா... உடனே ஊரைவிட்டுச் சென்றுவிடு. இல்லையெனில் வீட்டுக்கு தீ வைத்து எல்லோரையும் கொலைசெய்துவிடுவோம்'' என்று மிரட்டுகின்றனர்.

‘சொந்த வீட்டால நிம்மதி போச்சு; உசுர எடுத்துடுவேன்னு மிரட்டுறாங்க’- கண்ணீர் வடிக்கும் கொத்தனார்

நான் வேலைக்குச் சென்றபின் வீட்டில் கல் எறிதல், கதவைப் பூட்டிவிடுதல் எனத் தொடர்ந்து பயமுறுத்திவருகின்றனர். தகாத வார்த்தைகள் பேசி அசிங்கப்படுத்திவருகின்றனர். தொடர்ந்து தொந்தரவுகள் செய்துவருவதால், ஒருமுறை அம்மா மருந்து குடித்து தற்கொலைக்குக்கூட முயன்றார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சையளித்ததால் உயிர் பிழைத்தார். இதுகுறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் 4 முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொந்தமாக வீடு வாங்கியதற்காக இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துவருகிறோம். இதனால், எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. யார் யாரெல்லாம் தொந்தரவு செய்கிறார்கள் என்ற விவரத்தையெல்லாம் காவல் நிலையத்தில் புகாராகத் தெரிவித்துள்ளேன். எனவே, காவல் துறையினர் மற்றும் ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

Vikatan