Published:Updated:

சென்னையில் கமல்ஹாசனுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சந்திப்பு!

சுகன்யா பழனிச்சாமி
சென்னையில் கமல்ஹாசனுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சந்திப்பு!
சென்னையில் கமல்ஹாசனுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சந்திப்பு!

சென்னை வந்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசனை இன்று சந்தித்துப் பேசினார். 

சென்னை பள்ளிக்கரனையில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒடிசா பவன் மாளிகையை நவீன் பட்நாயக் நேற்று திறந்துவைத்தார். கடந்த 2012-ம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அந்தப் பணி தற்போது நிறைவடைந்ததை அடுத்து, கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஒடிசா முதல்வர், `கலாசாரத்தின் அடையாளமாகத் தமிழகம் திகழ்கிறது என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சென்னை நகரம் முன்னோடியாகத் திகழ்கிறது' என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, அரசியல் விவகாரம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள்குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.