Published:Updated:

மோடி ஸ்டைல்; காந்தி ஸ்டைல்!' - ஐ.டி. அதிகாரிகளைச் சுற்றும் சர்ச்சை

நமது நிருபர்
மோடி ஸ்டைல்; காந்தி ஸ்டைல்!' - ஐ.டி. அதிகாரிகளைச் சுற்றும் சர்ச்சை
மோடி ஸ்டைல்; காந்தி ஸ்டைல்!' - ஐ.டி. அதிகாரிகளைச் சுற்றும் சர்ச்சை

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டினின் ஊழியர் பழனி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

மோடி ஸ்டைல்; காந்தி ஸ்டைல்!' - ஐ.டி. அதிகாரிகளைச் சுற்றும் சர்ச்சை


அஸ்ஸாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வரும் கோவை தொழிலதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 4 நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். மார்ட்டினின் ஊழியர் ஒருவர் ஐ.டி விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். அவரது மரணம் தற்கொலையா கொலையா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. 

மோடி ஸ்டைல்; காந்தி ஸ்டைல்!' - ஐ.டி. அதிகாரிகளைச் சுற்றும் சர்ச்சை

வருமான வரித்துறையில் மோடி ஸ்டைல், காந்தி ஸ்டைல்...என்று இரண்டு ஸ்டைல்களைப் பின்பற்றும் அதிகாரிகள் யார்? யார்? என்று பட்டியலை ரெடிபண்ணியிருக்கிறார்கள் ஆடிட்டர்களுடன் தொடர்பில் உள்ள சிலர். அவர்கள் கணக்குப்படி, மோடி என்றால் அதிரடியான விசாரணை. காந்தி ஸ்டைல் என்றால், அமைதியான விசாரணை. மோடி ஸ்டைல் என்னவென்றால், பெரிய இடங்களில் ரெய்டு போகும்போது, அங்கிருக்கும் வி.ஐ.பியை கன்னாபின்னாவென்று திட்டி டார்ச்சர் கொடுக்கிறார்களாம். பெரிய பதவி, சமூகத்தில் முக்கிய அந்தஸ்தில் இருக்கும் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்களாம். நாமக்கல் கான்ட்ராக்டர் சுப்ரமணியம், ஐ.டி ரெய்டுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார்.

மோடி ஸ்டைல்; காந்தி ஸ்டைல்!' - ஐ.டி. அதிகாரிகளைச் சுற்றும் சர்ச்சை

அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தன்னைக் கேவலமாகப் பேசிய ஐ.டி. அதிகாரி ஒருவரின் பெயரை குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஐ.டி அதிகாரியை விட்டுவிட்டார்களாம். 
இதேபோலவே, ரெய்டு நடக்கும் இடங்களில் இருக்கும் கணக்காளர், காஷியர், டிரைவர், உதவியாளர்...இவர்களை குறிவைத்து அதிரடியாக கவனிக்கிறார்களாம். பிரபல மருத்துவக் கல்லூரி உரிமையாளரின் கார் டிரைவரை கடுமையாகக் கவனித்ததில் அவர் ஐசியூவில் அட்மிட் ஆனாராம். இப்படிக் கடந்த இரண்டு வருடத்தில் நடந்த ரெய்டுகளின் போது அன்பாக கவனிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நிறையவாம். 

காந்தி ஸ்டைல் என்னவென்றால், பெரிய இடங்களில் ரெய்டு போகும்போது பூர்வாங்க ஆதாரங்களைச் சேகரித்துக்கொண்டு போவார்களாம். அங்கே இருக்கும் வி.ஐ.பியிடம் ஸ்மெலிங்காகப் பேசி ஆதாரங்களை எடுத்துக்காட்டி விவரம் கேட்பார்களாம். எல்லாம் சரி!. சென்னையில் ஒரு கான்ட்ராக்டர் வீட்டுக்கு போய் ஏகப்பட்ட கோடிகளை கைப்பற்றும்போது, எங்கிருந்ததோ போன் வர, அதில் சிறு பகுதியை மட்டும் பிடித்ததாகச் சொல்லிவிட்டு வெளியேறினார்களாம். இந்தக் கதையை எந்தக் கணக்கில் சேர்ப்பது?' என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள் விவரமறிந்த ஆடிட்டர்கள் சிலர்.

Vikatan