Published:Updated:

டிக்-டாக்கில் அ.தி.மு.க, பா.ம.க-வை விமர்சித்த வி.சி.க பொருளாளர்! - வலைவீசும் போலீஸ்

எம்.திலீபன்
டிக்-டாக்கில் அ.தி.மு.க, பா.ம.க-வை விமர்சித்த வி.சி.க பொருளாளர்! - வலைவீசும் போலீஸ்
டிக்-டாக்கில் அ.தி.மு.க, பா.ம.க-வை விமர்சித்த வி.சி.க பொருளாளர்! - வலைவீசும் போலீஸ்

அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளை சமூக வளைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரைக் கைதுசெய்ய போலீஸார் தீவிரமாக முயன்றுவருகின்றனர். இந்த நிலையில், 'சமூக வலைதளங்களில் ஜாதிக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் செயல்பட்டால், அவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார், அரியலூர் எஸ்பி.

டிக்-டாக்கில் அ.தி.மு.க, பா.ம.க-வை விமர்சித்த வி.சி.க பொருளாளர்! - வலைவீசும் போலீஸ்

ஏப்ரல் மாதம் 18-ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, சிலரின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த நிலையில், அரியலூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த சிலர், ஒரு சமூகத்தினரைப் பற்றி இழிவாகப் பேசி, சமூக வலைதளங்களில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டுவருகின்றனர். இந்த நிலையில்,  பா.ம.க-வினரை இழிவாகப் பேசி வீடியோ ஒன்று வெளியிட்டவரைக் கைதுசெய்யக் கோரி, மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு பா.ம.க-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

டிக்-டாக்கில் அ.தி.மு.க, பா.ம.க-வை விமர்சித்த வி.சி.க பொருளாளர்! - வலைவீசும் போலீஸ்

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீரவளவன் என்பவர், செந்துறை ஒன்றிய வி.சி.க பொருளாளர். இவர்,  சமீபத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ம.க குறித்து மோசமாக விமர்சனம்செய்து, மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அறிவாளை கையில் பிடித்துக்கொண்டு எடுக்கப்பட்ட படங்களையும் பதிவிட்டு, மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள இரு சமூகத்தினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டிக்-டாக்கில் அ.தி.மு.க, பா.ம.க-வை விமர்சித்த வி.சி.க பொருளாளர்! - வலைவீசும் போலீஸ்

இதுகுறித்து சிறுகடம்பூர் வி.ஏ.ஒ கலைவாணன், இரும்புலிக்குறிச்சி போலீஸாரிடம் தீரவளவன் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தீரவளவனை வலைவீசித் தேடிவருகின்றனர். இதனிடையே, சிறுகடம்பூர் பகுதியில் கலவரம் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

``சமூக வளைதளங்கள் மற்றும் டிக்-டாக் செயலிகள் போன்ற சமூக வலைதளங்களில் ஜாதிக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் அவதூறு பரப்பினால், அவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும் என அரியலூர் எஸ்பி சீனிவாசன், கடுமையாக எச்சரித்துள்ளார்.

Vikatan