Published:Updated:

``நான் என் சொத்தை எழுதித் தருகிறேன்.. திருநாவுக்கரசர் தயாரா?” - பொன்னார் ஆவேசம்

சிந்து ஆர்
``நான் என் சொத்தை எழுதித் தருகிறேன்.. திருநாவுக்கரசர் தயாரா?” - பொன்னார் ஆவேசம்
``நான் என் சொத்தை எழுதித் தருகிறேன்.. திருநாவுக்கரசர் தயாரா?” - பொன்னார் ஆவேசம்

``நான் என்னுடைய சொத்தை தந்து விடுகிறேன். அப்படியாவது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்தால் சந்தோஷம். அதுபோல காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்களும் எழுதிக் கொடுப்பார்களா?" என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

``நான் என் சொத்தை எழுதித் தருகிறேன்.. திருநாவுக்கரசர் தயாரா?” - பொன்னார் ஆவேசம்

தமிழக எம்.பி.க்கள் 37 பேரும் தங்களின் சொத்தை விற்றாவது விவசாயிகள் கடன் மற்றும் கல்விக்கடனை அடைக்க முன்வர வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் காட்டமாகக் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான திருநாவுக்கரசர், ``முதலில் அவரது சொத்தை விற்று விவசாயிகள் கடனை அடைக்கட்டும்'' என பொன்.ராதகிருஷ்ணனைச் சாடியிருந்தார்.

இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட முட்டைக்காடு பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``திருநாவுக்கரசர் சொன்ன விஷயத்திற்கு முதலில் அவர் தயாரா. அவர் கட்சியில் வெற்றிபெற்றவர்கள்,  கூட்டணி கட்சியில் வெற்றிபெற்றவர்களும் தயாரா என எல்லாரையும் கேட்டுச் சொல்லட்டும். நான் என்னுடைய சொத்தை தந்து விடுகிறேன். அப்படியாவது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்தால் சந்தோஷம். நான் ரெடி, என்னைக்கு வரணும், எங்க கையொப்பம் போட்டுத் தரணும் என்று சொல்லட்டும்.

``நான் என் சொத்தை எழுதித் தருகிறேன்.. திருநாவுக்கரசர் தயாரா?” - பொன்னார் ஆவேசம்

என்றுடைய மொத்த சொத்து விவரத்தையும் தருகிறேன். நானே பேப்பருடன் வந்து எழுதி தருகிறேன், அவர்களும் வரட்டும். தமிழர்களுக்கு துரோகம் செய்த இரண்டு கட்சிகளும் ஜெயித்துள்ளது. தூத்துக்குடி மக்கள் கோபப்பட வேண்டுமென்றால் காங்கிரஸ், தி.மு.க. மீதுதான் கோபப்பட வேண்டும். அந்த மக்கள் எதிர்த்து போராடும் திட்டம் அனைத்தும் இவர்கள் காலத்தில் கொண்டு வந்தது. அதற்கான ஆதாரங்கள் உள்ளது, வேண்டுமென்றால் விவாதத்திற்கு வரட்டும்" என்றார்.