Published:Updated:

`உபரி மின்சாரம் இருந்தாலும்கூட...!’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி

பிரேம் குமார் எஸ்.கே.

மின்சார விற்பனையாளருக்கும் கொள்முதல்தாரருக்கும் சிக்கல் ஏற்பட்டால் ஒழுங்குமுறை ஆணையத்திடம் Dispute Resolition Petition என்றுதான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வழக்குப் பதிவு செய்வதென்றால் அந்தத் திட்டத் தொகையில் 1 சதவிகிதம் வழக்கின் கட்டணமாகக் கட்ட வேண்டும்.

`உபரி மின்சாரம் இருந்தாலும்கூட...!’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி
`உபரி மின்சாரம் இருந்தாலும்கூட...!’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி

நாட்டின் அத்தியாவசிய தேவைகளில் மின்சாரமும் ஒன்று. நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது அரசின் கடமை. தமிழகத்தில் அனல், புனல், அணு, காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தேவைக்காகத் தனியாரிடமும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழக மின் உற்பத்தியில் தனியாரை ஊக்கப்படுத்தும் விதமாகச் சூரியஒளி மூலம் மின்சார உற்பத்தியிலும் தனியாரை ஈடுபடுத்துகிறது. இதில் ஒரு பகுதியாகத்தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் 648 மெகாவாட் மின்சார உற்பத்தியை அதானி நிறுவனத்துக்கு அனுமதியளித்தது.  

`உபரி மின்சாரம் இருந்தாலும்கூட...!’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி

2014 -ம் ஆண்டு அதானி நிறுவனத்துக்கும் மின்சார வாரியத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அதானி தயாரிக்கும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 காசுகள் என்ற அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வாங்குவது என்று கையொப்பமானது. அப்போதே மற்ற மாநிலங்களில் கொள்முதல் விலை என்பது யூனிட்டுக்கு ரூ.5.45 காசுகளாகத்தான் இருந்தது. இதன் காரணமாக தமிழக மின்வாரியத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. 

`உபரி மின்சாரம் இருந்தாலும்கூட...!’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி

இதைத் தொடர்ந்து வேறு ஆதாரங்கள் மூலம் தேவைக்கேற்ப கிடைக்கிற போது அதானி நிறுவனத்தின் மின்சாரத்தை வாங்குவதைத் தற்காலிகமாக தவிர்த்தது தமிழக மின்சார வாரியம். ஆனால், தங்களிடம் வாங்கும் மின்சாரத்தைத் தற்காலிகமாகக் கூட நிறுத்தக் கூடாது என மின்வாரிய ஒழுங்குமுறை நீதி மன்றத்திடம் வழக்கைச் சமர்ப்பிக்க முயற்சி எடுத்தது. இதற்கிடையே நீதிமன்றமும் அதானி நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் தேவைக்கு மின்சாரம் கிடைத்தாலும் அதானியிடமிருந்து அதே விலையில் மின்சாரம் கொள்முதல் செய்வதை நிறுத்தக் கூடாது என்ற தொனியில் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

`உபரி மின்சாரம் இருந்தாலும்கூட...!’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய எஸ்.எஸ் சுப்பிரமணியன்(தலைவர், மின்சாரம் சி.ஐ.டி.யு )அவர்களிடம் பேசினோம். அவர்,  ``இந்திய நாட்டின் ஆள்வோர்கள் ஆசியைப் பெற்ற அதானி நிறுவனம் தன்னிடமிருந்து மின்சாரத்தைப் பெறுவதை தற்காலிகமாகக்கூட நிறுத்தக் கூடாது. தான் அமைத்துள்ள மின் நிலையத்தை 365 நாள்களும் 24 மணி நேரமும் உற்பத்தி நடைபெற வேண்டும். தமிழக மின்வாரியத்துக்குக் குறைவான விலையில் மின்சாரம் கிடைத்தாலும் எங்கள் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்வதை நிறுத்தக் கூடாது என்ற பொருளோடு மின்வாரிய ஒழுங்குமுறை நீதி மன்றத்திடம் வழக்கைச் சமர்ப்பிக்க முயற்சி எடுத்தது. 

மின்சார விற்பனையாளருக்கும் கொள்முதல்தாரருக்கும் சிக்கல் ஏற்பட்டால் ஒழுங்குமுறை ஆணையத்திடம் Dispute Resolition Petition என்றுதான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வழக்குப் பதிவு செய்வதென்றால் அந்தத் திட்டத் தொகையில் 1 சதவிகிதம் வழக்கின் கட்டணமாகக் கட்ட வேண்டும். அதாவது அதானி நிறுவனம் முதலீடு செய்துள்ள ரூ.2,450 கோடியில் வழக்குக் கட்டணமாக ரூ.24.50 கோடி செலுத்திட வேண்டும். அதனால் அவர்கள் அப்படி அணுகாமல் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகியதால் அந்த மனுவை அனுமதிப்பது என்பது பரிசீலனையில் இருந்தது. இதனிடையே ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்த மனு 2017 -ம் ஆண்டு ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. 

இதற்கிடையில் அதானி நிறுவனம் தனது மின் உற்பத்தியைத் தடையின்றிக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. உயர் நீதிமன்றமும் மின் கொள்முதல் தொடர்பாக எழும் சிக்கல்களை மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிட்டுத்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. 

`உபரி மின்சாரம் இருந்தாலும்கூட...!’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி

இதைத் தொடர்ந்து அதானி நிறுவனம் டெல்லியில் உள்ள மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகியது. அதில் தங்களது மின்சாரத்தைத் தடையின்றிக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. அதானி மின் நிறுவனம் வைத்த வாதங்களை கணக்கில் கொண்டு மேல்முறையீட்டு ஆணையம், அதானியின் குறைதீர்க்கும் மனு மீது விசாரணையை ஜூலை மாதம் 1 -ம் தேதி மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது” என்றார் விரிவாக.

இந்த அடிப்படையில் தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அதானியின் குறைதீர்க்கும் மனுவை ஏற்று, மின் உற்பத்தியைத் தமிழக மின்வாரியம் தேவையின் அடிப்படையில் நிறுத்தலாமா அல்லது உபரி மின்சாரம் இருந்தபோதும் அதிக விலை கொடுத்து அதானியின் மின்சாரத்தை வாங்கிக் கொள் என்று தீர்ப்பு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 

Vikatan