Published:Updated:

`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்!' - மக்களவையில் கனிமொழி பேச்சு

ராம் பிரசாத்
`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்!' - மக்களவையில் கனிமொழி பேச்சு
`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்!' - மக்களவையில் கனிமொழி பேச்சு
`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்!' - மக்களவையில் கனிமொழி பேச்சு

மக்களவையில் தி.மு.க எம்.பி கனிமொழி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்குறித்துப் பேசினார். தூத்துக்குடியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத்  தேர்வுசெய்யப்பட்டுள்ள கனிமொழி, மக்களவையில் இன்று பேசுகையில், ``தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள்மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு  சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம், மே 22, 2018-ல் நடந்தது. போராட்டக்களத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 16 பேர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆகஸ்ட் 14,  2018-ல் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.  இதுதொடர்பாக விசாரணை 4 மாதத்தில் முடிந்தது. ஆனால், சிபிஐ தரப்பில் ஒரு காவல்துறை அதிகாரியின் பெயர்கூட எஃப்.ஐ.ஆரில் இல்லை. விசாரணை இப்படி நடந்தால் தங்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என தூத்துக்குடி மக்கள் நம்புவார்கள்.

இந்த நிலையில்தான் தேசிய மனித உரிமை ஆணையம் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாகத்  தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஒரு குழுவையும் அனுப்பியது. தமிழக அரசு கூறியதைக் கேட்டு, அந்தக் குழு விசாரணையை முடித்துக்கொண்டது. பொதுமக்களிடம் சம்பவம் குறித்து கேட்கவில்லை. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. இதில் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 17 வயது சிறுமி ஸ்னோலின் நெற்றியில் சுடப்பட்டதில் இறந்துள்ளார். அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்'' என்றார்.

Vikatan