Published:Updated:

பேத்தி தப்பிய அந்த நொடி... தாத்தாவுக்கு நடந்த சோகம்! - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

எம்.திலீபன்

அரியலூர், பெரியார் நகரில் வசிப்பவர் முருகேசன். இவர், உடையார்பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு, மருந்து வாங்கத் தனது பேத்தியுடன் அரியலூர் சின்ன கடைத்தெருவில் உள்ள மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அப்போது, மருந்து வாங்கிவிட்டு டூவிலரை ஸ்டார்ட் செய்து அவரது பேத்தியை ஏற்ற முயன்றார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த லோடு ஆட்டோவைப் பார்த்து, அவரது பேத்தி அலறி அடித்துக்கொண்டு கடையை நோக்கி ஓடிவிட்டார். லோடு ஆட்டோ மோதிய வேகத்தில், தாத்தா தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தார்.  நூலிழையில் பேத்தி உயிர் தப்பிய சிசிடிவி காட்சி நெஞ்சைப் பதறவைக்கிறது.

பேத்தி தப்பிய அந்த நொடி... தாத்தாவுக்கு நடந்த சோகம்! - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

மேலும், தாத்தாமீது மினி லாரி மோதிய சம்பவத்தைப் பார்த்த பேத்தி கதறி அழும் காட்சி, காண்போரைக் கண்கலங்க வைத்திருக்கிறது.  மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், வேகத்தடை அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துவிட்டனர். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் பொதுமக்கள். அதேபோல், இந்த லோடு ஆட்டோவை ஓட்டிவந்தது யார் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Vikatan