Published:Updated:

மீண்டும் மீண்டும் தள்ளுபடியாகும் நிர்மலா தேவி, முருகன் ஜாமீன் மனுக்கள்!

அருண் சின்னதுரை
மீண்டும் மீண்டும் தள்ளுபடியாகும் நிர்மலா தேவி, முருகன் ஜாமீன் மனுக்கள்!
மீண்டும் மீண்டும் தள்ளுபடியாகும் நிர்மலா தேவி, முருகன் ஜாமீன் மனுக்கள்!

பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகனின் ஜாமீன் கோரிய மனுக்களைத் தள்ளுபடிசெய்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்றதாக எழுந்த புகாரில், கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார், பேராசிரியை நிர்மலா தேவி. அவருடன், உதவிப் பேராசிரியர் முருகன், பிஹெச்.டி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். சிபிசிஐடி விசாரித்துவரும் இவ்வழக்கில், இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. பல முறை மனுத்தாக்கல் செய்தும் விருதுநகர் நீதிமன்றம்  ஜாமீன் வழங்கவில்லை. இந்த நிலையில், இவர்கள் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்துள்ள ஜாமீன் மனு நிலுவையில் இருந்துவந்தது.

இந்த நிலையில், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் கோரிய மனுவை ஜூலை மாதம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் செப்டம்பர் மாதத்துக்குள் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து விசாரணையை ஆறு மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும், கீழமை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன், ஜாமீன் வழங்கக் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தினந்தோறும் விசாரணைசெய்து, விரைவாக வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும். மேலும், பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகனின் ஜாமீன் கோரிய வழக்கைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.