Published:Updated:

`என் உயிர் இருக்கிற வரைக்கும் உங்கள மறக்க மாட்டேன்மா!'- புது தள்ளுவண்டிக் கடையால் ஜெயமணி ஆனந்தக் கண்ணீர்

ஆ.சாந்தி கணேஷ்

''இந்த வண்டி வாடகைதாம்மா. அதுக்கு தினக்கூலி கொடுக்கணும். எனக்கு வயசாகிப் போச்சில்லையா... அதனால வண்டி தள்ளுறதுக்கு ஒரு பையன் வருவான். அவனுக்கு கூலி கொடுக்கணும். எல்லாம் போக மிச்சம் இருக்கிறதுலதான் நானும் என் பேத்தியும் மானம், மரியாதையோட வாழ்ந்துட்டு இருக்கோம்'' - கடந்த பிப்ரவரி மாதம் விகடன் ஆன்லைனுக்காக எடுத்த பேட்டி ஒன்றில், சாப்பாட்டுக் கடை நடத்திவரும் ஜெயமணி அம்மாள் கண்ணீருடன் சொன்ன வார்த்தைகள் இவை.

`என் உயிர் இருக்கிற வரைக்கும் உங்கள மறக்க மாட்டேன்மா!'- புது தள்ளுவண்டிக் கடையால் ஜெயமணி ஆனந்தக் கண்ணீர்

சென்னை கெல்லீஸ் பகுதியில், அபிராமி மால் இருந்த இடத்துக்கு அருகே, தள்ளுவண்டியில் சாப்பாட்டுக் கடை நடத்திவருகிற ஜெயமணி, நாலைந்து மொழிகளில் பேசுகிறார் என்று கேள்விப்பட்டுத்தான், அவரை நேரில் சந்திக்கச் சென்றோம். ஆனால், நேரில் சந்தித்தபோது,  தனி மனுஷியாக அவர் சந்தித்த, சந்தித்துவருகிற வாழ்க்கைப் போராட்டங்கள், ஜெயமணியை ஒரு தன்னம்பிக்கை மனுஷியாகவே நமக்கு அடையாளம் காட்டியது.  அதனாலேயே, அவரை பேட்டிகண்டு செய்தி வெளியிட்டோம். அப்போது, ''நான் குழந்தையா இருந்தப்போவே அப்பா தவறிட்டாரு. எனக்குக் கல்யாணமாகுறதுக்கு முன்னாடியே அம்மா இறந்துட்டாங்க. கல்யாணமாகி அஞ்சே வருஷத்துல கணவரும் தவறிட்டாரு.  வீட்டு வேலை, சமையல் வேலை செஞ்சே ஒத்தப் புள்ளைய வளர்த்து ஆளாக்கி, கல்யாணமும் பண்ணிக் கொடுத்துட்டேன்.

ரெண்டு பேரப் புள்ளைங்க இருக்காங்க. அதுல, பேத்தியை நான்தான் வளர்க்கிறேன். அவ கல்யாணத்தைப் பார்க்கிற வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' என்று கண்ணீர் மல்க பேசியவரின் வார்த்தைகள், படித்தவர்களின் மனங்களையெல்லாம் உருக்கியது. அதில் அமெரிக்காவில் இருக்கிற விகடன் வாசகி சுகன்யாவும் ஒருவர். 'ஜெயமணி அம்மாவுக்கு நான் ஒரு தள்ளுவண்டி வாங்கித் தர விருப்பப்படுகிறேன்' என்று அவர் நம்மைத் தொடர்புகொள்ள, உதவி மனப்பான்மைக்கும் தேவைக்கும் இடையில் பாலமாக நின்றது விகடன். இதோ, இன்று மதியம் 12 மணிக்கு வழக்கம்போல தன் வாடகைத் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த ஜெயமணி அம்மாவிடம், புத்தம்புதிய தள்ளுவண்டியை வழங்கினோம். ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனார் ஜெயமணி அம்மா. சிரிப்பும் கண்ணீருமாக வாடகை வண்டியில் இருந்த தன் சாப்பாட்டுப் பாத்திரங்களையெல்லாம் தன்னுடைய புதிய, சொந்த வண்டியில் மாற்றிக் கொண்டார்.

`என் உயிர் இருக்கிற வரைக்கும் உங்கள மறக்க மாட்டேன்மா!'- புது தள்ளுவண்டிக் கடையால் ஜெயமணி ஆனந்தக் கண்ணீர்

 ''என் தாய் தகப்பன், கூடப் பொறந்தவங்க, என் வீட்டுக்காரரு யாருமே செய்யாத உதவியை சுகன்யா அம்மாவும் விகடன் பத்திரிகையும் செஞ்சிருக்கீங்க. என் உயிர் இருக்கிற வரைக்கும் உங்களை மறக்க மாட்டேன்மா. கோடான கோடி நன்றி சொல்லிக்கிறேம்மா'' என்றபோது, ஜெயமணி அம்மாவின் கண்களில் வழிந்தது ஆனந்தக் கண்ணீர்.

Vikatan