Published:Updated:

மலைப்பாம்பு... கொம்பு ஆந்தை... ஓணான்... சிறுவர்களை அசரவைக்கும் கல் சிற்பங்கள்! #MyVikatan

எஸ்.தேவராஜன்

புதுச்சேரியில் உள்ள பாரதி பூங்காவில், ஒரே கல்லில் தத்ரூபமாகச் செதுக்கப்பட்ட வனவிலங்கு சிற்பங்கள், சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துவருகின்றன.

மலைப்பாம்பு... கொம்பு ஆந்தை... ஓணான்... சிறுவர்களை அசரவைக்கும் கல் சிற்பங்கள்! #MyVikatan

புதுச்சேரிக்கு வரும் சுற்றலாப் பயணிகளைக் கவரும் விதமாகவும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகிறது புதுச்சேரி அரசு.

மலைப்பாம்பு... கொம்பு ஆந்தை... ஓணான்... சிறுவர்களை அசரவைக்கும் கல் சிற்பங்கள்! #MyVikatan

அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைக்கு எதிரில் உள்ள பாரதி பூங்காவில் மலைப்பாம்பு, ஓணான், பட்டாம்பூச்சி, மயில், மண்புழு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் உருவங்களைத் தத்ரூபமாக கல்லில் செதுக்கி வண்ணம் தீட்டியிருக்கிறார்கள். புதுச்சேரி கடற்கரைச் சாலை, ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை போன்றவற்றின் மையத்தில் அமைந்துள்ளது, இந்த பாரதி பூங்கா.  பூங்காவின் அருகிலேயே மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், அருங்காட்சியகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இருக்கின்றன. 

மலைப்பாம்பு... கொம்பு ஆந்தை... ஓணான்... சிறுவர்களை அசரவைக்கும் கல் சிற்பங்கள்! #MyVikatan

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவற்றைப் பார்த்து மகிழ்ந்துவருகிறார்கள்.