Published:Updated:

`செலவுக்கு ரூ.55,78,500 எடுத்துக்கிட்டோம்!'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊழியர்களின் வாக்குமூலம்

நவீன் இளங்கோவன்
`செலவுக்கு ரூ.55,78,500 எடுத்துக்கிட்டோம்!'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊழியர்களின் வாக்குமூலம்
`செலவுக்கு ரூ.55,78,500 எடுத்துக்கிட்டோம்!'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊழியர்களின் வாக்குமூலம்
`செலவுக்கு ரூ.55,78,500 எடுத்துக்கிட்டோம்!'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊழியர்களின் வாக்குமூலம்

ஈரோட்டில் ஏ.டி.எம்-மில் நிரப்ப எடுத்துச்சென்ற பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக 50 லட்ச ரூபாய்க்கு மேல் ஊழியர்களே கையாடல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் விவேகானந்தா ரோட்டில் sis prosegur holdings (p) ltd என்னும் நிறுவனம் இயங்கிவருகிறது. ஒரு குறிப்பிட்ட வங்கிகளிடம் ஒப்பந்தம் செய்து பணத்தைப் பெற்று, அவர்களுடைய ஏ.டி.எம்-களில் ஊழியர்களைக்கொண்டு பணத்தை நிரப்புவதை இந்த நிறுவனம் செய்து வந்திருக்கிறது. அப்படி ஊழியர்கள்மூலம் ஏ.டி.எம்-களில் நிரப்பப்பட்ட பணத்தின் விவரத்தை, கிளை மேலாளரான  சாம் மகேஷ்குமார் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி தணிக்கைசெய்திருக்கிறார். 

அப்போது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம்-களுக்கு நிரப்புவதற்காக அனுப்பப்பட்ட பணத்திற்கும், ஏ.டி.எம்-களில் நிரப்பப்பட்ட பணத்திற்கும் பெரும் வித்தியாசம் இருந்திருக்கிறது. அதனையடுத்து, ஈரோட்டிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏழு ஏ.டி.எம்-களில் நிரப்ப அனுப்பப்பட்ட பணத்தில் 55,78,500 ரூபாய் பணம் காணாமல் போயிருப்பது தெரியவந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்-களில் பணத்தை நிரப்பியபோது, பொறுப்பில் இருந்த ஊழியர்கள் இருவரை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர். 

விசாரணையில், ‘ஏ.டி.எம் இயந்திரங்களில் நிரப்புவதற்காகக் கொண்டுசென்ற பணத்தை சொந்தச் செலவுகளுக்காக கையாடல் செய்ததாகவும், அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும்’ அதிகாரிகளிடம் கூறியதோடு, ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கின்றனர். அதனையடுத்து, பிப்ரவரி மாதம் 29-ம் தேதி வரை 8 தவணைகளாக 5,12,000 ரூபாயை மட்டுமே கொடுத்திருக்கின்றனர். மீதமுள்ள 50,66,500 ரூபாயைக் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கின்றனர். அதனையடுத்து, ‘கையாடல் செய்த பணத்தை மீட்டுத் தாருங்கள்’ என நிறுவனத்தின் கிளை மேலாளரான சாம் மகேஸ்குமார், ஈரோடு எஸ்.பி-யிடம் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து ஈரோடு குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கையாடல் செய்த ஊழியர்களான அழகேசன், பிரகாஷ், முருகானந்தம் மற்றும் கையாடல் செய்த பணத்தை வைத்திருந்த வினோத் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

திருடன் கையிலேயே சாவியைக் கொடுக்கலாமா!

Vikatan