Published:Updated:

நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா?- அதிர்ச்சித் தகவல்

நமது நிருபர்
நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா?- அதிர்ச்சித் தகவல்
நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா?- அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாடே தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நாள் ஒன்றுக்கு 9,000 லிட்டர் தண்ணீர் அனுப்பப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா?- அதிர்ச்சித் தகவல்

சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சாமானியர்கள் குடிநீர் கிடைக்காமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள். கால்நடைகள் செத்து மடிகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை. சென்னைக்கு மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படும். பொதுமக்கள் பிரச்னையைப் புரிந்துகொண்டு குடிநீரை சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும். மூன்று நான்கு மாதங்களுக்கு நிலத்தடி நீரை எடுத்துதான் சப்ளை செய்ய வேண்டும். ஊடகங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் இருப்பது போன்ற மாயை ஏற்படுத்தக் கூடாது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆலோசனையின் பேரில் குடிநீர் வாரியம் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று தெரிவித்தார். 

அதே வேளையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 9,000 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. `மூன்று வேளை தண்ணீர் கேட்பார்கள். கேட்கும்போதெல்லாம் நாங்கள் அனுப்பி வைப்போம்' என்று டைம்ஸ் நவ் ஆங்கில சேனலுக்குக் குடிநீர் வாரிய ஊழியர் ஒருவர் அளித்த பேட்டியில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. காலை 6 மணி, 11 மணி தொடர்ந்து மாலை 3 மணிக்கு முதல்வர் வீட்டுக்கு 3 டேங்கர் லாரிகளில் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல், அமைச்சர்கள் வீட்டுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை டேங்கர் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது என்கிறார்கள். 

Vikatan